விநாயகர் சதுர்த்தி வந்தாலே..சின்ராச கைல பிடிக்க முடியாது! இன்ஸ்டாவை கலக்கும் ’தளபதி’ கணபதி! ப்ளாஸ்ட்

  • சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகை வந்துவிட்டாலே கொண்டாட்டம்தான். விதவிதமாக விநாயகர் சிலைகளை வைத்து கலக்கி விடுவார்கள் தமிழர்கள். பாகுபலி விநாயகர், ரோபோ விநாயகர், தோனி விநாயகர் வரிசையில் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது 'தளபதி' கணபதி. கோட் சூட்டில் சி.எம். விஜய் சட்டமன்றத்தில் செய்த ஆக்சனை வைத்து உருவாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படும் இந்த விநாயகர் சிலை தான் இன்ஸ்டாகிராமை கலைக்கி வருகிறது.

    Advertisement

    விநாயகர் சதுர்த்தி வந்து விட்டாலே கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. வட மாநிலம் - தென் மாநிலம் என்று இல்லாமல் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவது விநாயகர் சதுர்த்தி. வீடுகளில் களிமண் விநாயகர் சிலை வைத்து கொழுக்கட்டை படைத்து வழிபடுவது வழக்கம்.

    Advertisement

    அதே நேரத்தில் பல்வேறு அமைப்புகள், இளைஞர்கள் தங்கள் ஊர்களில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது விநாயகர் சதுர்த்தி. எந்த செயலை செய்தாலும் சுப நிகழ்ச்சிகளை தொடங்கினாலும் விநாயகப் பெருமானை வணங்கி தொடங்குவது ஐதீகம்.

    அப்படிப்பட்ட விநாயகனுக்கே ஒரு விழா என்றால் விட்டுவிடுவார்களா? அப்படித்தான் விநாயகர் சதுர்த்தியை ஒரு திருவிழா போல கொண்டாடும் பழக்கம் இந்தியர்களிடையே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக பொது இடங்களில் விதவிதமாக விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது பல ஆண்டுகளாக தொடர்கிறது.

    Advertisement

    கடந்த சில ஆண்டுகளாகவே வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. பாகுபலி விநாயகர், கொரோனா விநாயகர், சாக்லேட் விநாயகர், தோனி விநாயகர், புட்பால் விநாயகர் என தங்களுக்கு பிடித்த பிரபலத்தையும் நடிகரையோ விளையாட்டு வீரராயோ விநாயகர் சிலை போல செய்து வழிபடுவது வழக்கம். யார் மிகவும் வித்தியாசமாக சிலை வைத்திருக்கிறார்கள் என்ற போட்டியும் நடக்கும்.

    அந்த வகையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விதவிதமாக விநாயகர் சிலை வைத்து வழிபடுவது பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சினிமா மோகம் தமிழக இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கும் நிலையில், எல்லாம் விழாக்களிலும் சினிமா சாயல் சற்றே இருக்கும். திருவிழாக்களுக்கு ப்ளக்ஸ் அடிப்பதில் தொடங்கி டி-ஷர்ட் அடிப்பது தங்கள் நாயகர்களை கொண்டாடுவார்கள்.

    Advertisement

    விநாயகர் சதுர்த்தி என்றால் விட்டுவிடுவார்களா? அப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போதும் விதவிதமாக பல இடங்களில் பிரதிஷ்டை செய்வார்கள். பாகுபலி பிள்ளையார், எந்திரன் பிள்ளையார், சிட்டி ரோபோ பிள்ளையார், லியோ பிள்ளையார் என கடந்த ஆண்டுகளில் பலவகை பிள்ளையார்கள் தமிழகத்தை கலக்கினர்.

    அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் வரவாக சிஎம் தளபதி கணபதி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆன பிறகு கோட் சூட்டில் சட்டசபைக்கு வந்த முதல்வர் விஜய் 'எங்க உங்க அப்பாவையே காணோம்' என கேட்டதோடு முன்னாள் முதல்வர் ஸ்டாலினி கேம் ஓவர் ஆக்‌ஷனை செய்து காட்டினார்.

    Advertisement

    இதனிடையே ஜனநாயகன் திரைப்படம் வெளியான போது அதே சைகையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என டைட்டில் கார்டும் இடம் பெற்றது. தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிரம்மாண்ட தளபதி விஜய் கணபதி சிலை ரெடியாகி வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இதை அடுத்து விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றி கழகத்தினரும் அந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் அது ஒரிஜினல் வீடியோ இல்லை, ஏஐ மூலம் தயார் செய்யப்பட்டது எனவும் சிலர் கூறி வருகின்றனர். எது எப்படியோ இப்போதைக்கு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் இந்த தளபதி கணபதி தான்.

    English Summary

    A unique Thalapathy Vijay-inspired Ganapathy idol is trending on Instagram ahead of Vinayagar Chaturthi celebrations in Tamil Nadu.