இது தான் மேடவாக்கத்தின் உண்மையான நிலை.. சென்னைக்கு பக்கத்தில் இருந்தும் மோசமான நிலை

  • சென்னை: சென்னைக்கு மிக அருகில் இருந்தாலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் கோவிலம்பாக்கம், மேடவாக்கம் போன்ற தென் சென்னையின் முக்கியமான ஊர்கள், தனி ஊராட்சியாகவே இருந்தன. தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்ட போதும், அவை இணைக்கப்படாமல் இருந்தது இருந்தது.. போதிய உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் தவித்த ஊராட்சிகளை தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளன. இதுதான் மேடவாக்கத்தின் நிலையாக இருக்கிறது. ஆனால் சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.

    Advertisement

    தென் சென்னை பகுதிகளான பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள் கட்டமைப்பு வசதிகள், சென்னை மாநகரத்தில் உள்ளது போல் சரியாக மேம்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக இருக்கிறது. குறிப்பாக பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதிகளில் சாலைகள் சரியான அகலத்துடன் இல்லாமல் ஆக்கிரமிப்புகளுடன் உள்ளதால், கடும் நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் மழைநீர் வடிகால்கள் வசதிகள், சாக்கடை வசதிகள், முறையான சாலை வசதிகள் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

    Advertisement

    உண்மையில் மேடவாக்கம் என்பத வேளச்சேரி, தாம்பரம் இணைப்புச் சாலையில் உள்ள முக்கியமான ஏரியாவாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இங்கு மக்களின் குடியேற்றமும் குடியிருப்புத் திட்டங்களும் எதிர்பார்த்ததை விட மின்னல் வேகத்தில் உயர்ந்த. அதற்கு ஈடுகொடுத்து திட்டங்களைச் செயல்படுத்த அரசால் முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.

    இதுமட்டும் காரணமல்ல, பாதாள சாக்கடை திட்டம் காரணமாக சரியான சாலை வசதிகளை பல பகுதிகளில் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் மேடவாக்கம் சந்திப்பில் மெட்ரோ ரயில் ஐந்தாம் பாதை திட்டப் பணிகள் மற்றும் புதிய மேம்பால இணைப்புகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தது. இத்தகைய மிகப்பெரிய கட்டமைப்புப் பணிகள் நடக்கும் போது, பிற உள்ளூர் உள்கட்டமைப்பு பணிகளை (சாலை அகலப்படுத்துதல், நடைபாதை போன்றவை) முழுமையாக முடிப்பது அரசுக்கு கடினமாக மாறியுள்ளது.

    Advertisement

    மேடவாக்கத்தில் மேடவாக்கம் ஏரி, பள்ளிக்கரணை சதுப்புநிலம் மற்றும் பல்வேறு நீர் வழித்தடங்கள் உள்ளன. இவற்றில் உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையான மழைநீர் வடிகால்களை அமைப்பது மற்றும் நிலத்தடி கழிவுநீர்க் கால்வாய் திட்டங்களைச் செயல்படுத்த அரசுக்கு கடும் சவால்கள் நிலவுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    அதேபோல் மேடவாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்தவும், சேவைச் சாலைகளைச் சீரமைக்கவும் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதில் சட்டப்பூர்வச் சிக்கல்கள் மற்றும் இழப்பீடு வழங்கும் நடைமுறைகள் மெதுவாக இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். மேலும் சென்னைக்கு பக்கத்தில் இருந்தாலும் பல ஆண்டுகளாக மேடவாக்கம் கிராம பஞ்சாயத்தாக இருந்து, பின்னர் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் தான் இருப்பதால், தி ஒதுக்கீடு மற்றும் திட்டமிடல் ஒருங்கிணைப்பில் காலதாமதம் ஏற்படுகிறது.

    Advertisement

    இதனிடையே மேடவாக்கம் மேம்பாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் மோசமான நிலைமை குறித்து எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் வேதனையுடன் எழுப்பியுள்ள புகார்கள் வைரலாகி வருகிறது. ஓராண்டு கடந்தும் மேடவாக்கம் மேம்பாலப் பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் இருட்டாகவே இருக்கிறது. மேடவாக்கம் பாலத்தின் மீதும், பாலத்திற்குக் கீழேயும் நடுவண் பகுதி மற்றும் கடைசிப் பாதைகளில் கழிவுகளும், மணலும் அள்ளப்படாமல் அப்படியே கிடக்கின்றன. பாலம் தொடங்கும் இடத்தில் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் ஆபத்தான பகுதி என்பதற்கான எச்சரிக்கைப் பலகைகள் எதுவும் வைக்கவே இல்லை.

    மேடவாக்கம் ஊராட்சியில் மின்சாரக் கட்டணம் செலுத்தப் போதிய நிதி இல்லை என்றால், சூரிய ஒளி மின்சாரத் தகடுகளை நிறுவியாவது விளக்குகளை எரிய வைக்கலாம். வெளிச்சம் இல்லாத இருட்டில் வாகனங்களை ஓட்டுவது வாகன ஓட்டிகளின் உயிருக்குப் பெரிய ஆபத்தாக முடிவடைகிறது என்று கூறி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதல்வர் விஜய் மற்றும் பிற முக்கிய அதிகாரிகளின் கணக்குகளைடேக் செய்து நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English Summary

    Lights not working on the flyover area. Mud and debris deposited near the median and last lanes on the flyover and below the flyover too. if Medavakkam Panchayat doesn't have money to pay the EB Bills, install solar panels for the lights to work. Motorists drive in dark which is a major risk.