TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. இந்த சான்சையும் மிஸ் பண்ணிடாதீங்க! ஒரே நாள்தான் டைம் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை தான் கடைசி நாள் ஆகும். கடந்த 4 ஆம் தேதியே அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் 4 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன்படி குரூப் 4 விண்ணப்பிக்க 8 ஆம் தேதி கடைசி நளாகும். 6,547 காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வாயிலாக நிரப்ப உள்ளது.

தமிழகத்தில் அதிக தேர்வர்கள் எழுதும் தேர்வு எது என்றால் குரூப் 4 தேர்வுதான். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். நடப்பு ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

TNPSC Group 4 Exam Dont miss this opportunity tomorrow is the last date to apply

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றால் இளநிலை உதவியாளர், விஏஒ, வருவாய் உதவியாளர், வரி வசூலிப்பவர், நிர்வாக உதவியாளர், நேர்முக எழுத்தர், வனக்காவலர் உள்ளிட்ட 46 வகையான பணிகளில் 6,547 காலிப்பணியிடங்களை நடப்பு ஆண்டில் நிரப்ப டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இணையதளமான www.tnpsc.gov.in,www.tnpscexams.in-வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 4 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை, மேலும் 5 ஆண்டுகள் உயர்த்தி அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன்படி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (நவம்பர் 8) கடைசி நாளாகும்.

இனி கால நீட்டிப்பு இருக்காது

ஆனால், வழக்கத்தை விட இந்த ஆண்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு குறைவாக இருந்த நிலையில், தேர்வர்களின் கோரிக்கையையும் ஏற்று விண்ணப்பிக்க கூடுதலாக 4 நாட்கள் அவகாசம் தரப்பட்டது. இதுவரை தேர்வர்கள் யாரும் விண்ணப்பிக்காமல் இருந்தால், இந்த வாய்ப்பினையும் தவற விட்டுவிடாதீர்கள்.. ஏனெனில் இதற்கு பிறகு கால நீட்டிப்பு இருக்காது என்றே தெரிகிறது.

தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலே விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், தமிழ்வழியில் படித்ததற்கு முன்னுரிமை கோருபவராக இருந்தால் அதற்கான சான்றிதழ்கள் எல்லாம் அருகில் வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் சான்றிதழ்களின் எண்களை தேர்வர்கள் பதிவிட வேண்டும்.

56 சதவீதம் வரை குறைவு

விண்ணப்ப கட்டணமாக ரூ.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும். குரூப் 4 தேர்வை பொறுத்தவரை போட்டி தேர்வில் வென்றால் உடனடியாக அரசு வேலை கிடைக்கும் என்பதால் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் இந்த தேர்வை பெரிதும் எதிர்பார்த்து ஆண்டுக்கணக்கில் படித்து வருகிறார்கள். குரூப் 4 தேர்வு வரும் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

குரூப் 4 தேர்வுக்கு அறிவிப்பு வெளியானதில் இருந்தே வழக்கமாக தேர்வர்கள் போட்டி போட்டு விண்ணப்பிப்பது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டு 56 சதவீதம் வரை விண்ணப்பிப்பது குறைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி கேட்கப்படும் கேள்விகள், கால தாமதம் உள்ளிட்டவையே தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி மீதான நம்பிக்கையை குறைத்து வருவதையே இதை காட்டுவதாகவும் கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

தற்போது கூடுதல் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் - 4 தேர்வுக்கு 2022 ஆம் ஆண்டு, 22.06 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். 2024 ஆம் ஆண்டு 20.37 லட்சம் பேரும், கடந்த ஆண்டில் 13.89 லட்சம் பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+