அடுத்த அமெரிக்காவாக மாறும் போலாந்து.. கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபர்! 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

வர்சா: போலாந்தில் சந்தையில் மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில்தான் துப்பாக்கி கலாச்சாரம் அதிகம் என கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால், அமெரிக்காவுக்கு போட்டியாக போலாந்து உருவெடுத்திருக்கிறது. அந்நாட்டில் தற்போது சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியிருக்கிறது.

Poland

இன்று மதியம் 3 மணியளவில், போலாந்தின் 2வது மிகப்பெரிய நகரமான கிராகோவில் உள்ள சந்தையில் ராணுவ உடையில் வந்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக குறி வைக்காமல் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதனால் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 15 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

தாக்குதல் நடத்திய நபர் ராணுவ ரக துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கிறார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சுயநினைவு வந்த பின்னர்தான்.. விசாரணை நடக்கும். பின்னர்தான் தாக்குதலுக்கான காரணம் தெரிய வரும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்.. ஐரோப்பிய நாடுகளில் போலாந்துதான் அதிக பாதுகாப்பு கொண்ட நாடாக கருதப்பட்டது. அப்பேற்பட்ட நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதுதான். கடந்த ஆண்டு மட்டும் புதியதாக 50,700 பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்நாட்டில் துப்பாக்கியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும்.. போலாந்து இன்னொரு அமெரிக்காவாக மாறிவிடக்கூடாது என்பதுதான் பலரின் வேண்டுதலாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+