திருச்சிக்கு திடீர் மவுசு.. 2வது தலைநகராகும் மலைக்கோட்டை மாநகர்! CM டேபிளில் ஃபைல்! விரையில் ஆர்டர்?

  • சென்னை: தமிழகத்தின் தலைநகராக சென்னை தொடர்ந்து வரும் நிலையில் இரண்டாவது தலைநகராக திருச்சியை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே எழுந்து வருகிறது. குறிப்பாக திருச்சியை தலைநகராக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வரும் நிலையில் அதனைப் பற்றிய ஆய்வில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக விரைவில் இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்றும் சொல்கின்றன தலைமைச் செயலக வட்டாரத்தினர்.

    Advertisement

    தமிழகத்தின் தலைநகராக சென்னை தான் விளங்கி வருகிறது. வெள்ளையர் ஆட்சி காலத்திலேயே மெட்ராஸ் மாகாணமாக இருந்து, பின்பு தமிழ் நாடாக மாறிய போதும் தலைநகராகவே தொடர்ந்து வருகிறது சென்னை மாநகர்.

    Advertisement

    துறைமுகங்கள், விமான நிலையம் என பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள், நிர்வாக கட்டமைப்புகள், காரணமாக சென்னை தான் சிறந்த தேர்வாக இருந்தது. தலைமைச் செயலகம் தொடங்கி பல்வேறு அரசு அலுவலகங்களும் சென்னையில் தான் இருக்கிறது.

    அதே நேரத்தில் பல தேவைகளுக்காக சென்னையை நோக்கி தான் மக்கள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற கடைக்கோடி தென் மாவட்ட மக்களும் சென்னைக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இதை அடுத்து திருச்சி அல்லது மதுரையை தலைநகராக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருக்கிறது.

    Advertisement

    ஒவ்வொரு ஆட்சியிலும் இரண்டாவது தலைநகரம் என்ற பேச்சு எழுவதும் பின்னர் அது அடங்கிப் போவதும் வழக்கம் தான். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலேயே திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற திட்டமிட்டு நிலையில் பல்வேறு காரணங்களால் அது கைகூடவில்லை. இந்த நிலையில் தற்போது திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்திருக்கிறது.

    சென்னைக்கு அருகே துணை நகரம் அமைக்கப்படும் என பேசப்பட்டு வரும் நிலையில் திருச்சியை இரண்டாவது தலைநகராக தேர்ந்தெடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக ஆயிரம் கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டிய தென் மாவட்ட மக்கள் திருச்சிக்கு வந்து செல்வது எளிதாக இருக்கும். திருச்சியை இரண்டாவது தலைநகராக மேம்படுத்தினால் மத்திய மற்றும் தென் மாவட்ட மக்கள் அரசு சேவைகளை பெறுவதற்கு எளிதாக இருக்கும்.

    Advertisement

    மேலும் விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்பு என பல்வேறு போக்குவரத்து வசதிகளும் திருச்சியில் இருப்பதால் இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பல மாநிலங்களில் இரண்டாவது தலைநகர், துணைத் தலைநகர் இருக்கும் நிலையில் தற்போது தமிழக அரசு இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாகவும். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

    English Summary

    Demand to make Tiruchirappalli Tamil Nadu’s second capital gains attention amid unconfirmed reports of a government review and possible announcement.