போலி பெண் மருத்துவர் கைது.. +2 மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது அம்பலம்!

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் மருத்துவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள அம்பலூர் ஊராட்சி கோகுல் சிட்டி பகுதியில் வசித்து வரும் தனலட்சுமி (53) என்பவர், 12ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) வேல்முருகனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

12th-Pass Woman Posing as Doctor Arrested for Practising English Medicine Near Vaniyambadi

இதையடுத்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர் கணேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனலட்சுமி மருத்துவப் படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர் அவரை அம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மருத்துவர் கணேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனலட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+