கோவை நூலக மோசடி: விஜய் பெயரில் எப்படி திடீரென இவ்வளவு எழுத்தாளர்கள் முளைத்தார்கள்? பெ சண்முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் அறிவு மோசடி நடந்துள்ளது. விஜய் என்ற பெயரில் திடீரென எப்படி இவ்வளவு எழுத்தாளர்கள் முளைத்தார்கள் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். எந்த ஆட்சியில் முறைகேடுகள், மோசடிகள் நடந்திருந்தாலும், யாராக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகம் என்ற நூலகத்தில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி புத்தகங்களை பல மடங்கு அதிக விலைக்கு வாங்கி பெரிய மோசடி நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறியுள்ளார். தமிழகம் முழுக்க நேற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் என சிபிஎம் பெ சண்முகம் தெரிவித்துள்ளார்.

Coimbatore library scam How did so many books suddenly appear under Vijay s name CPM Shanmugam

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் அறிவு மோசடி நடந்துள்ளது. நூல்களோடு குப்பைகளையும் சேர்த்து வைத்தது பெரிய மோசடி. விஜய் என்ற பெயரில் திடீரென எப்படி இவ்வளவு எழுத்தாளர்கள் முளைத்தார்கள் என்று தெரியவில்லை. நூலகத்தில் நூல்களை தான் வைக்க வேண்டும், குப்பைகளை இல்லை. இந்த குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மோசடியை வெளியில் கொண்டு வந்த எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். எந்த ஆட்சியில் முறைகேடுகள், மோசடிகள் நடந்திருந்தாலும், யாராக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும். இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். திடீரென எழுத்தாளர்கள் முளைத்துள்ளனர்.

வழக்கமான காவல்துறை விசாரணை மூலமாக எந்த உண்மையையும் கொண்டு வர முடியாது என்பதால் தான் நாங்கள் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என கூறுகிறோம். அதுமட்டுமின்றி இருக்கக்கூடிய நூல்களை முதலில் அங்கிருந்து முதலில் அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு தமிழ் அறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து தவறான ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நூல்களை நூலகத்தில் இருந்து அகற்ற வேண்டும்.. என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+