தவெகவிற்கே ஆதரவு.. மாஸாக அறிவித்தார் ஜிகே வாசன்! அப்போ இடைத்தேர்தலில் விஜய் கட்சிக்குதான் வெற்றியோ?

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா தற்போது இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    Advertisement

    நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

    Advertisement

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய த.வெ.க அரசு விளங்குகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.

    பெருந்தலைவர் காமராஜரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் மக்களுக்கு நேர்மையான ஆட்சியை, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

    குறிப்பாக குறைந்த நாட்களிலேயே தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் நம் முதல்வர் ஜோசப் விஜய். இதன் மூலம் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    எனவே புதிய தவெக அரசின் நல்ல தூய முயற்சிக்கு நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் த.வெ.க கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) ஆதரவளிக்கிறது என்பதை த.மா.கா (மூ) சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    English Summary

    Tamil Maanila Congress (TMC), led by GK Vasan, has extended its support to the TVK candidates in the Maduranthakam and Dharapuram by-elections.