இங்கே வராதீங்க.. கெட் அவுட்! திமுக எம்எல்ஏ செயலால் உச்சக்கட்ட டென்ஷன் ஆன சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

  • சென்னை: சட்டசபையில் முதல்வர் விஜய் பேசிய அமலாக்கத்துறை ஆவண தகவல், சர்க்காரியா கமிஷன், மிசா விவகாரம் மற்றும் முரசொலி மாறன் பற்றிய விஷயங்களை நீக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அப்போது தன்னை நோக்கி வேகமாக வந்த திமுக எம்.எல்.ஏவை பார்த்த சபாநாயகர் ஜேசிடி பிராபகர், உச்ச கட்ட கோபத்துடன் "இங்கே வராதீர்கள்.. கெட் அவுட்" என்று கடும் கோபத்துடன் எச்சரித்தார்.

    Advertisement

    தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அவை வழக்கம் போல காலை 9.30 மணிக்கு கூடியது. அவை கூடியதும், முதல்வர் விஜய் நேற்று பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான திமுக கோரிக்கை விடுத்தது.

    Advertisement

    முதல்வர் விஜய் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் தகவல்களையும்ம் ஆதாரமற்ற தகவல்களையும் பேசியிருப்பதால் அவற்றை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக கொறடா எ.வ வேலு வலியுறுத்தினா. ஆனால், முதல்வர் விஜய்யின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டியது இல்லை என்று சபாநாயகர் அறிவித்தார்.

    சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள் ரளையில் கோஷம் எழுப்பினர். சபாநாயகர் இருக்கயின் அருகில் சென்று சேகர் பாபு, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால், டென்ஷன் ஆன சபாநாயகர் இருக்கையில் போய் அமருங்கள் இல்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார்.

    Advertisement

    ஒரு நிமிடத்திற்குள் போய் இருக்கையில் அமர்ந்தால் உங்கள் கொறடா எ.வ. வேலு அல்லது கே.என் நேருவுக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்குவேன் என்று சபாநாயகர் கெடு விதித்தார். எனினும், இதனை ஏற்க மறுத்த திமுக எம்.எல்.ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு திமுக உறுப்பினர்க முழக்கம் இட்ட நிலையில், சபாநாயகரை நோக்கி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயேன் வேகமாக சென்றார்.

    தன்னை நோக்கி வேகமாக வந்த திமுக எம்.எல்.ஏவை பார்த்த சபாநாயகர் ஜேசிடி பிராபகர், உச்ச கட்ட கோபம் அடைந்தார். "இங்கே வராதீர்கள்.. கெட் அவுட்" என்று கடும் கோபத்துடன் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனை எச்சரித்தார். இதையடுத்து உடனடியாக வசந்தம் கார்த்திகேயன் அங்கிருந்து நகர்ந்து சென்றார். தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபடவே, திமுக எம்.எல்.ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    Advertisement

    இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்களை குண்டு கட்டாக அவைக்காவலர்கள் வெளியே தூக்கி சென்றனர். இன்று அவை கூடியதில் இருந்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த நிகழ்வுகளால் சட்டசபை பரபரப்பாக காணப்பட்டது. திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றப்பட்ட நிலையில், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    English Summary

    JCD Prabhakar: DMK members created a continuous ruckus, demanding the removal of remarks made by Chief Minister Vijay regarding matters currently under judicial scrutiny and information lacking evidentiary basis. Observing a DMK MLA rushing towards him, Speaker J.C.T. Prabhakar warned him sternly in a fit of extreme anger, shouting, "Don't come here... Get out!"