சென்னை பெரம்பூரில் மகளுடன் திருமணத்தை மீறிய உறவிலிருந்த வாலிபர்.. ஆத்திரப்பட்ட தந்தை.. விபரீதம்
சென்னை: சென்னை பெரம்பூர் செம்பியம் சக்கரபாணி தோட்டம் பகுதியில், மகளுடன் திருமணத்தை மீறிய உறவிலிருந்த ரமேஷ் என்பவரை கண்டதும் தந்தை கடும் ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர் தாக்கியதில் ரமேஷ் உயிரிழந்தார். மகளுடனான உறவை விட சொல்லி தந்தை சக்கரபாணி பலமுறை எச்சரித்தும் ரமேஷ் உறவைத் தொடர்ந்ததால் ஆத்திரத்தில் இந்த விபரீதம் நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை செம்பியம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு ரமேஷ் என்ற இளைஞர் ஒரு இளம் பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழும் ரமேஷை பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் பலமுறை எச்சரித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. கள்ளக்காதலை கைவிடும்படி அவர்கள் வற்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
எனினும் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி வந்த ரமேஷ், தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் பழகி வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணிண் தந்தை ரமேஷைப் பழிவாங்கத் திட்டம் தீட்டினாராம்.
நேற்று இரவு செம்பியம் பகுதி வழியாக ரமேஷ் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த பெண்ணின் தந்தை அவரிடம் தன் மகளை விட்டு பிரிந்து செல்லும் படி மீண்டும் எச்சரித்தாராம். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இளம் பெண்ணின் தந்தை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமேஷை சரமாரியாகக் குத்தினாராம். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து பெண்ணின் தந்தை அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பியம் காவல் நிலைய போலீசார், ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய பெண்ணின் தந்தையை தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னையில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 2வது கொலை
சென்னை அபிராமபுரத்தில் முன் விரோதத்தால் நேற்று கத்தியால் வெட்டப்பட்ட சிவகுமார் (27) என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய லோகநாதன், வீரா, ராமு, அஜித் ஆகியோர் தனியார் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த நிலையில், போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications
