முதல்வர் விஜய் தலைமையில் இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்.. சர்ச்சையில் சிக்கியவர்களுக்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியாா் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது. அமைச்சர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

Vijay TVK MLAs

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இந்த சூழலில் எப்போது வேண்டுமானாலும் எதிர்க்கட்சிகள் நினைத்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர முடியும். தற்போது கூட்டணி கட்சிகளின் பலத்தில் தான் விஜய் தலைமையிலான தவெக அரசு அதிகாரத்தில் இருக்கிறது. இடதுசாரிகள் தவெகவிற்கு ஆதரவு தொடர்ந்து தருவதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது. தற்போது நான்கு தொகுதிகள் காலியாக உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தாலும் பெரிய சிக்கல் தவெகவிற்கு இல்லை.. எனினும் தவெக எம்எல்ஏக்கள் வாக்கை மாற்றி போட்டால் மட்டுமே ஆட்சிக்கு சிக்கலாகும். ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு என்றே சொல்கிறார்கள். இந்த சூழலில்
தமிழகத்தில் தவெக சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் மீதான புகாா்கள் அதிகரித்துள்ளது. அதேபோல் அண்மை காலத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த விமா்சனங்கள் கடுமையாக எழுந்துள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியாா் நட்சத்திர விடுதியில் இன்று காலை நடைபெறுகிறது. தற்போது உள்ள பரபரப்பான சூழல் காரணமாக இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் தவெக சட்டப்பேரவை உறுப்பினா்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வா் விஜய் ஆலோசனை நடத்துவாா் என்று தெரிகிறது.. மக்கள் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு மற்றும் கட்சியின் எதிா்கால செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் விஜய் அறிவுறுத்துவாா் என்று சொல்லப்படுகிறது. சில எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கட்சித் தலைமை கருதுகிறது.

குறிப்பாக, தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய நபர் ஒருவரை தவெக எம்.எல்.ஏ. ரவிசங்கர் தாக்கிய விவகாரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விசாரணையைத் தவெக மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே துணை சபாநாயகர் ரவிசங்கர் , கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் இதுபற்றி முதல்வர் விஜய் எந்த பதிலும் இதுவரை அளிக்கவில்லை. அமைச்சர் ராஜ்மோகன் மட்டுமே இந்த விவகாரங்கள் தொடர்பாக விளக்கம் அளித்து வருகிறார். மற்ற அமைச்சர்களோ, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரும் விளக்கமும் அளிக்கவில்லை.. கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விமர்சனங்களுக்கு பதிலும் இதுவரை வரவில்லை. எனவே இன்றைய கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+