சோலி முடிஞ்சு! 6 மாசம் தான் விஜய் ஆட்சி.. 6 வருஷம் தமிழ்நாடு பேக்ல போயிடுச்சு! அதிமுக மாஜி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் ,வளர்ச்சித் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு முன்னுக்குப் பின் அரசாணை வெளியிடுவதும், அதன்பின் அதனை ரத்து செய்வதும் என முரண்பாடான சூழல் நிலவுவதாகவும், 6 மாத தவெக ஆட்சியில் தமிழகம் ஆறாண்டு பின்னோக்கிச் சென்று விட்டது என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.

மதுரையில் பேசிய அவர்," தவெக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது இந்த 6 மாதத்திலே 2,993 டெண்டர்கள் ரத்து செய்தது, தவெக அரசு தந்த மாற்றமோ மாற்றம் என்ற நிலையில், வளர்ச்சித் திட்டங்கள் எங்கே போனது?

RB Udhayakumar Vijay TVK

வளர்ச்சித் திட்டங்கள் தவெக அரசில் தலைப்புச் செய்தியாக இன்றைக்கு பத்திரிகைகளில் வெளிவரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. கடந்த 6 மாதங்களிலே பல்வேறு துறைகளைச் சார்ந்த 2,993 அரசு டெண்டர்களை ரத்து செய்திருப்பது என்பது நாம் கொஞ்சம் கவனமாக சிந்திக்க வேண்டியது.

ஆர்பி உதயகுமார்

ஏனென்று சொன்னால், ஒரு புதிய பாலம் கட்ட வேண்டும் என்றாலோ, குடிநீர்க் குழாய் பதிக்க வேண்டும் என்றாலோ? மின்சாதனங்கள் வாங்க வேண்டும் என்றாலோ? தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளி கோரும் நடைமுறைக்குத்தான் ஒப்பந்தப் பணி, டெண்டர் என்று பெயர். புதிய ஆட்சி அமைந்ததும் முந்தைய அரசு இறுதி செய்த ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய தவெக அரசு முடிவு எடுத்தது

விஜய் ஆட்சி

பல திட்டங்களின் மதிப்பீடு தேவையின்றி மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அரசு கஜானாவிற்கு ஏற்படும் வீண் விரயத்தைத் தடுக்கவும் மறுஆய்வு நடத்தப்படுவதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், ஆட்சி மாற்றத்திற்கு சற்று முன்பு மிக குறுகிய கால அவகாசத்தில் வெளியிடப்பட்ட 100 மேற்பட்ட அரசு டெண்டர்கள் அவசர அவசரமாக வெளிப்படைத்தன்மைக்கு விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி ரத்து செய்யப்பட்டிருந்தாலும் கூட, அது வரவேற்கக்கூடியது. இருந்தாலும், சுமார் 2,993 டெண்டர்கள் என்பது பல முக்கியத் துறைகளுடைய பணிகள் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.

வளர்ச்சித் திட்டங்கள்

ஆனால் வளர்ச்சித் திட்டங்கள் இப்போது தடுமாறி கொண்டிருப்பதை தவெக அரசு கவனத்திலே கொள்ள வேண்டும். இப்போது மின்வாரியக் கொள்முதல், புதிய துணைமின் நிலையங்கள் மற்றும் மின் விநியோக கட்டமைப்பு சார்ந்த அந்த ஒப்பந்தங்களும் மின் கொள்முதல் உட்பட்ட ரத்து செய்யப்பட்டது. குறைந்த விலைக்கு 20 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மின் கொள்முதல் ஒரு யூனிட் மின்சாரமும் இப்போது 41.50 பைசாவுக்கு 5 முறை டெண்டர் கொடுத்தாகிவிட்டது.

சென்னை திட்டங்கள்

அதேபோல சென்னை மாநகரில் சாலைகள் சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைப்பு பணிகள் மற்றும் 284 கோடி மதிப்பிலான நவீன நடைபாதைத் திட்டங்கள் முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் சுமார் 21 முக்கிய சாலை ஒப்பந்தங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் வாகன ஓட்டிகளுக்கான சாலையோர ஓய்வு மையங்கள் அமைப்புத் திட்டங்கள் மற்றும் வெளிவட்டச் சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

வெளிப்படைத்தன்மை

வெளிப்படைத்தன்மை இல்லை அல்லது அதில் பல்வேறு முறைகேடுகள் இருக்கிறது என்பதெல்லாம் ஆய்வுக்கு உட்பட வேண்டும். கண்டிப்பாக அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அதை காரணம் காட்டி வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் புதிய ஒப்பந்தங்கள் கோராமல் புதிய பணிகள் தொடங்காமல் புதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது என்பது அரசே இன்றைக்கு தடுமாறிக்கொண்டிருக்கிறது, இப்போது இந்த தடுமாற்றத்தை எப்படி தடுக்கணும்? மின்னல் வேகத்தில் ஒரு புதிய அரசு வருகிறபோது மக்களுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கின்ற வகையில் இருக்க வேண்டும் தற்பொழுது முன்னுக்குப் பின் முரணாக அரசாணை வெளியிடுறது, அப்புறம் ரத்து செய்யப்படுகிறது.

பின்னோக்கி தமிழகம்

சுருக்கமா சொன்னால், ஆறு மாதத்துல ஆறு ஆண்டு பின்னோக்கி செல்கிறது. எதற்காக இந்த நடவடிக்கை, எதற்காக ரத்து செய்யப்பட்டது, எதற்காக என முதல்வர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து சொல்லணும்ன்றது கூட இல்லை. அட்லீஸ்ட் ஒரு அறிக்கையாவது முதல்வர் அலுவலகத்திலிருந்து அறிக்கையாவது, ஏன் இந்த டெண்டர் ரத்து, எதற்காக இந்த அரசாணை போடப்பட்டது, எதற்காக அரசாணை ரத்து செய்யப்பட்டது, வாபஸ் வாங்கப்பட்டது, இந்தப் பணி நியமனங்கள் எதற்காக போடப்பட்டது. என கூட வேண்டும்

தவெக அரசு

இந்த தவெக அரசு ஒரு ரத்து அரசாங்கமாக இருக்குது. திட்டங்கள் ரத்து, அரசாணை ரத்து, டெண்டர் ரத்து, ஒட்டுமொத்தத்துல மக்களுடைய மகிழ்ச்சி ரத்து என்கிறதுதான் தவெக அரசின் சாதனை. ஆறு மாதத்தில் ஆறு ஆண்டு அரசு பின்னோக்கி செல்கிறது" என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+