ரயில்களில் ஜூலை 1 முதல் டபுள் ஃபைன் ரூ.500... ரயில்வே வாரியம் திடீர் முடிவுக்கு பின்னணி என்ன

  • சென்னை: ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஜஸ்ட் லைக் தட் பயணம் செய்பவரா நீங்கள்? அப்படின்னா உங்களுக்கு ஒரு ஷாக்கிங் செய்தி காத்திருக்கிறது.. ஆம், இனி ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால், இப்போது வசூலிக்கப்படும் அபராதத் தொகை அப்படியே டபுள் ஆகிவிடுமாம்.. ஜூலை 1ம் தேதி முதல் இந்த புதிய அதிரடி உத்தரவு அமலுக்கு வரவுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    இந்தியாவின் உயிர்நாடியாக விளங்குவது ரயில் போக்குவரத்து தான். ஏழை, எளிய மக்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை அனைவரும் பெரிதும் நம்பியிருப்பது இந்த சேவையைத்தான்.

    Advertisement

    நாடு முழுவதும் தினமும் சுமார் 13,000 பயணியர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நாள்தோறும் 2.50 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் தங்களின் அன்றாட பயணங்களை மேற்கொள்கின்றனர். எனினும், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதும், அதனால் ரயில்வே துறைக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதும் தொடர்ந்து நீடித்து வரும் ஒரு தீராத கதையாகவே இருந்து வருகிறது.

    ரயில்களில் டிக்கெட் இல்லையா

    பொதுவாக ரயில்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் மீது, ரயில்வே சட்டம் 1989-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின் கீழ், இதுவரை டிக்கெட் இல்லாமல் பிடிபடும் பயணிகளுக்கு 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

    Advertisement

    ஆனால், இந்த குறைந்தபட்ச அபராதத் தொகை பலருக்கும் ஒரு பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. 250 ரூபாய் தானே என்று அசால்ட்டாக நினைத்துக்கொண்டு டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதற்குதான் முற்றுப்புள்ளி வைக்க, ரயில்வே நிர்வாகம் இப்போது இந்த அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளது.

    250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்வு

    இதற்காக புரிதய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.. அதில், அபராதத் தொகை 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் சொல்லும்போது, ரயில்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போரிடம், அவர்கள் பயணிக்க வேண்டிய தூரத்திற்கான அசல் டிக்கெட் தொகையுடன், கூடுதலாக 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    Advertisement

    இப்போது இந்த அபராதத் தொகையை 500 ரூபாயாக உயர்த்தி ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    பயணிகள் வரவேற்பு

    ரயில்வே துறையின் இந்த திடீர் அதிரடி உத்தரவு, டிக்கெட் இல்லாமல் ஊர் சுற்றும் பயணிகளுக்கு நிச்சயம் ஒரு பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அதேசமயம் முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் நேர்மையான பயணிகளுக்கு இது ஒரு வரவேற்கத்தக்க முடிவாகவே பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அபராதத் தொகை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளதால், இனிமேலாவது ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறையுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே மக்களே... இனி ரயிலில் ஏறும் முன் கையில் டிக்கெட் இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்வது உங்கள் பர்ஸுக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது!

    English Summary

    Train Passengers Face ₹500 Double Fine from July 1; What Led to the Railway Board’s Decision?