காலி சேர்கள்.. ஆளே இல்லாமல் பேசிய தவெக கூட்டணி தலைவர்கள்.. காற்று வாங்கிய மதுராந்தகம் பொதுக்கூட்டம்!

  • சென்னை: நேற்று மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை.. மைதானத்தில் தொண்டர்கள் இன்றி காலி சேர்களே இருந்தன.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, வரும் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் அதிரடி பிரச்சாரத்தால், இரு தொகுதிகளும் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.

    Advertisement

    தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் கடந்த 25 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இடைத்தேர்தலில் தீய சக்திக்கும், மற்றும் பலருக்கும் நீங்கள் சரியான ஒரு பாடம் புகட்ட வேண்டும் என விஜய் பேசினார். மேலும் இன்றும் மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.

    இதற்கிடையே மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து தவெக கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டனர். தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி கட்சித் தலைவர்களின் இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று மாலை மதுராந்தகத்தில் நடைபெற்றது.

    Advertisement

    இந்தப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன்,மதிமுக எம்.பி துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்று வாக்கு சேகரித்தனர். அமைச்​சர்​கள் என். ஆனந்த், ஆதவ் அர்​ஜுனா, விஸ்​வ​நாதன், ஷாஜ​கான் உள்​ளிட்ட பலரும் பங்​கேற்​றனர்.

    இந்தப் பொதுக்கூட்டத்தில் தவெகவினர் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் கூடவில்லை. மேடையில் தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது ஏராளமான இருக்கைகள் காலியாகவே இருந்தன. குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவன் பேசி முடித்ததும் அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கூட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

    கிட்டத்தட்ட, மைதானமே காலியான நிலையில் தான் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசினார். மதுராந்தகத்தில் நடைபெற்ற மசவெ கூட்டணியின் முதல் தேர்தல் பொதுக்கூட்டம் காலி சேர்களுடன் காற்று வாங்கியது தொடர்பான வீடியோக்களை எதிர்க்கட்சிகள் பகிர்ந்து விமர்சித்து வருகின்றன.

    English Summary

    The turnout at the election campaign public meeting held yesterday in Maduranthakam —organized by the TVK led 'Secular Social Justice Victory Alliance'—fell short of expectations; the venue was filled with empty chairs rather than party cadres.