விஎஸ் பாபு கவலைக்கிடம்? தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பு! அவசரமாக ஹாஸ்பிடலுக்கு சென்ற அமைச்சர்!

  • சென்னை: சென்னை கொளத்தூரில் முதல்வர் அப்போதைய முதல்வர் முக ஸ்டாலினை தோற்கடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ விஎஸ் பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவரது உடல்நிலை குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. விஎஸ் பாபுவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும், அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனை தரப்பில் அவரது உடல்நிலை குறித்த அறிக்கை விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    2026 தமிழக சட்ட்சபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஎஸ் பாபு போட்டியிட்டார். முதல்வராக இருந்த முக ஸ்டாலின் 74 ஆயிரத்து 22 வாக்குகள் பெற்ற நிலையில், விஎஸ் பாபு 82997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    Advertisement

    சுமார் 80, 700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் ஸ்டாலின். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இருந்த போதும் நேரடியாக மக்களை சந்தித்து நன்றி தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.

    இருந்த போதும் விஎஸ் பாபு ஸ்டாலினின் கேம் ஓவர் செய்கையை செய்து காட்டியதன் மூலம் தான் சமூக வலைத்தளங்களில் பிரபலமானார். காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு முடிந்ததும் முக ஸ்டாலின் அறிவாலத்தில் இருந்து புறப்பட்டபோது ஒரு கையில் சைகை காட்டியது வைரலானது.

    தேர்தல் முடிவுகள் வந்த போது விஎஸ் பாபு இரண்டு கைகளால் கேம் ஓவர் செய்கையை செய்து காட்டினார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த பிறகு அவருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அரசியலில் சீனியராக இருந்த போதும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டது.

    Advertisement

    இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த தமிழக சட்ட சபையில் சில நிகழ்வுகளில் மட்டுமே வி எஸ் பாபு பங்கேற்றார். பின்னர் பெரும்பால நாட்களில் அவர் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் உடனக்குறைவு காரணமாக அவர் பாதிக்கப்பட்டு இருப்பதால் கடந்த 9ஆம் தேதி சென்னையில் பிரபலமான எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானது.

    தொடர்ந்து மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவர்களது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் வி எஸ் பாபுவின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிவந்தது.

    Advertisement

    இந்த நிலையில் தற்போது விஎஸ் பாபுவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், கவலைக்கிடமான நிலையில், மருத்துவனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அமைச்சர்கள் ஆனந்த் உள்ளிட்டோர் நேரில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் பேசியதாகவும் சிகிச்சை குறித்து கேட்டறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வி எஸ் பாபு உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    TVK MLA VS Babu remains under intensive medical monitoring after hospitalisation, with ministers visiting to enquire about his condition.