பைபிளின்படி நடந்ததால் தான் தவெக ஆட்சி அமைந்தது.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சொன்ன வார்த்தை!

  • சென்னை: பைபிளின்படி நடந்ததால் தான் தவெக ஆட்சி அமைந்துள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்,. அறிவு, திறமை, ஆற்றல் என்று அனைத்தும் இறைவனிடம் இருந்து தான் வருகிறது என்று கூறிய ஜேசிடி பிரபாகர், கடவுளை நம்புகிறவர்களுக்கு சகலனும் நன்மை செய்வார் என்றே பைபிளில் கூறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அண்மையில் கத்தோலிக்க திருச்சபை சார்பாக சென்னையில் நடந்த கருக்கலைப்பு எதிரான பேரணியில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். இந்த கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசுகையில், கருவை கலைக்க உரிமை இல்லை.. கரு உருவான கணத்தில் இருந்தே உயிர் தொடங்குகிறது.

    Advertisement

    ஒவ்வொரு குழந்தையும் கடவுள் அளித்த பரிசு என்று பேசி இருந்தார், ஜேசிடி பிரபாகரின் பேச்சு தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியது. அதுமட்டுமல்லாமல் தவெக ஆட்சி மீது தொடர்பாக கிறிஸ்தவ சாயல் விழுந்திருக்கிறது. ஏனென்றால் முதல்வர் விஜய் தொடங்கி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட பலரும் கிறிஸ்தவர்கள் தான்.

    அதேபோல் விஜய்யும் தேர்தலுக்கு பின் ஜோசப் விஜய் என்ற முழுப் பெயரையே பயன்படுத்தி வருகிறார். நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டசபையிலும் கூட, நான் பிறப்பிலேயே கிறிஸ்தவன் என்று பேசி இருந்தார். இதனால் தவெகவுக்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு அளித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சென்னையில் கிறிஸ்தவ அறக்கட்டளையின் 4ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    Advertisement

    அதில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசுகையில், நான் சபாநாயகரான பின் உன்னிப்பாக பார்க்கிறேன். இந்த அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கிறது, செய்திகள் என்ன வருகிறது என்று பார்க்கிறேன். ஊழல் இல்லாத அரசு என்று மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர். அமைதியான தமிழ்நாட்டை விரும்பும் முதல்வர் வந்திருப்பதாக கூறுகின்றனர்.

    எல்லாமே கடவுளிடம் இருந்து தான் வருகிறது.. நாம் தான் பெரிய அறிவாளி, திறமைசாலி, நமக்கு தான் எல்லாம் தெரியும் என்றால், அப்படி ஒன்றும் கிடையாது.. எல்லாமே கடவுளிடம் இருந்தே வருகிறது. அதுதான் அவரை நம்புகிறவர்களுக்கு சகலமும் நன்மை கிடைக்கும் என்று சொல்கிறது. பைபிளின்படி நடந்ததால் தான் தவெக ஆட்சி அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    TVK: Speaker JCD Prabhakar Says Bible Principles Led to TVK Coming to Power in Tamilnadu