சென்னை: அமைச்சர் ராஜ்மோகனின் வரலாறு எங்களுக்கு நன்றாக தெரியும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டுக்கு முன் திமுக ஆட்சியை அதிகம் பாராட்டியதே அமைச்சராக இருக்கும் ராஜ்மோகன் தான் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், இடம் மாறியதால் இப்போது மாற்றி பேசுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சிற்கு பின், அமைச்சர் ராஜ்மோகன் பேசினார். அப்போது ராஜ்மோகன், திமுக ஆட்சியில் போதைப்பொருள் வழக்கில் அக்கட்சியை சேர்ந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். 32 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக சொன்னார்கள்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் எஃப்ஐஆரை ஆன்லைனில் வெளியிட்டீர்கள். சிங்கப்பெண் திட்டம் மூலமாக பிரச்சனைகள் நடப்பதாக தடுக்கப்படுகிறது. குற்றங்களில் பெரிய குற்றம் பெரிய குற்றம் கொலைக் கொலை தான். திமுக ஆட்சியில் தான் தோட்டக் கொலை அதிகரித்தது. அதேபோல் மெரினாவில் பூட்டு போட்டதே திமுக தான். நீட்டுக்கு எதிராக போராட திமுக எப்போது அனுமதி அளித்தது. அதேபோல் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இருந்த போது, அவர் அவைக்கே வரவில்லை. அவரின் துறைகளுக்கும் மற்ற அமைச்சர்கள் பதில் அளித்தார்கள். திமுக ஆட்சியின் போது பெண் போலீஸ்க்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடி படையைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் ஆட்சி போய் கொண்டிருக்கிறது. அதேபோல் நான் துணை முதல்வராக இருந்த போது அவைக்கு வரவில்லை என்று அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். நீங்கள் வேண்டுமானால் வருகை பதிவேட்டை எடுத்து பாருங்கள். அமைச்சர் ராஜ்மோகன் பட்டிமன்ற பேச்சாளர். இங்கும் பட்டிமன்றத்தில் பேசுவதையே போலவே பேசுகிறார். வரலாறு எல்லாம் பேசுகிறார். ஆனால் அவரின் வரலாறு எங்களுக்கு நன்றாக தெரியும். ஒரு ஆண்டுக்கு முன் எங்களின் கட்சி மேடைகளில், அரசு நிகழ்ச்சிகளில் திமுகவை அதிகம் பாராட்டியது பள்ளிக்கல்வி அமைச்சர் தான். அதற்கான ஆதாரம் எல்லாம் எங்களிடமும் இருக்கிறது. இடமாறி போனதால், மாற்றி மாற்றி பேசுகிறார். அதேபோல் முதல்வர் விஜய் பதில் அளிக்கும் போது யாரும் ஓடாமல் இருங்கள் என்று கூறிவிட்டு, அவர் ஓடிவிட்டார். அவர் சொன்ன வார்த்தையை தான் நானும் சொல்கிறேன். முதல்வர் திங்கட்கிழமை உரிய பதில் அளிப்பார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு திமுகவினர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.