தண்ணீர் எப்படி இருக்கு பார்ப்போம்.. நெம்மேலியில் நீரை குடித்து பார்த்து ஆய்வு செய்த முதல்வர் விஜய்

  • சென்னை: சென்னை மாமல்லபுரம் நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் தமிழக முதல்வர் விஜய் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது முதல்வர் விஜய் நன்னீராக்கப்பட்ட நீரை குடித்து பார்த்து ஆய்வு செய்தார். முன்னதாக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், எதிர்காலத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    Advertisement

    தலைநகர் சென்னையில் குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஒரு நாளைக்கு 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் வகையிலான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியானது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் விஜய் இன்று கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டு பணிகள் வேகமாக நடக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    Advertisement

    நீரை குடித்து பார்த்து ஆய்வு செய்த முதல்வர் விஜய்

    அப்போது திட்டத்தின் செயல்பாடு, உற்பத்தி திறன், விரிவாக்க பணிகள் என அனைத்தையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கடல்நீர் உறிஞ்சப்படும் தொழில்நுட்பம் முதல் அது சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் வரையிலான ஒட்டுமொத்தக் கட்டமைப்பினையும் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் முதல்வர் விஜய்க்கு விளக்கி கூறினர். ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டார் முதல்வர் விஜய். அப்போது நன்னீராக்கப்பட்ட நீரை சிரித்துக்கொண்டே விஜய் குடித்து பார்த்தார்.

    சென்னை மாமல்லபுரம் அருகே நெம்மேலியில், கடந்த 2006 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, சுத்திரகரிப்பு நிலையம் அலகு -1 பணிகள் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. இங்குள்ள முதல் அலகு மூலமாக நாள் ஒன்றிற்கு 110 மில்லியன் லிட்டர் தண்ணீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு, சென்னை மக்களின் குடிநீருக்காக முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.

    Advertisement

    20 லட்சம் பேர் பயன்பெறுவர்

    இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது அலகு கடந்த 2024 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினால் பயன்பாடுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலமாக நாள் ஒன்றிற்கு 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்கள் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து தான் அதே 2024 ஆம் ஆண்டில் ரூ.1500 கோடி முதலீடு செய்யப்பட்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்ட மூன்றாம் அலகு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தான் இன்று தமிழக முதல்வர் விஜய் இங்கு ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அதிகாரிகள் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். விஜய்யும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று அதன் பணிகள், செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மூன்றாம் அலுகு திட்டம் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சுமார் 20 லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும், இதற்கான பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    Advertisement

    முதல்வர் விஜய் இன்று திடீரென நேரில் சென்று கள ஆய்வு நடத்தியது அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

    English Summary

    Vijay Inspects Nemmeli Desalination Plant (நெம்மேலியில் முதல்வர் விஜய் ஆய்வு): Tamil Nadu Chief Minister Vijay inspected the Nemmeli desalination plant and reviewed the progress of the drinking water project. He tasted the desalinated water during the visit and instructed officials to expedite the implementation of the new water supply scheme.