சவுமியா அன்புமணி தந்தை கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கிய விஜய்! விருது பெற்றவர்கள் லிஸ்ட்

  • சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்தார். மேலும் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும், பரிசினையும் விஜய் வழங்கினார்.

    Advertisement

    முதல்வர் விஜய் இன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்த பிறகு, காவல்துறை பதக்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளையும் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-

    Advertisement

    தகைசால் தமிழர் விருது

    தமிழ்நாடு அரசால் கடந்த 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் அன்புமணி மனைவியும் எம்.எல்.ஏவுமான சவுமியா அன்புமணியின் தந்தை ஆவார்.

    தகைசால் தமிழர் விருதை பெறும் நபருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் என். சங்கரய்யாவுக்கும், 2022 ஆம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, 2023 ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, 2024 ஆம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், 2025 ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொயதீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    Advertisement

    கல்பனா சாவ்லா விருது

    வீரசாகசம் புரிந்தவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது கோவையை சேர்ந்த நவ்ஷீன் பானு சந்த் என்ற பெண்ணுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டது. இவர் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 2 முறை தொட்டவர். டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான் என்ற உலகிலேயே கடினமான மலையேற்றத்தை அவர் ஏறியுள்ளார்.

    சிறந்த மாநகராட்சி:

    முதல் பரிசு - கோவை
    இரண்டாம் பரிசு - தஞ்சை

    சிறந்த நகராட்சி:

    முதல் இடம் - போடிநாயக்கனூர்
    2-வது இடம் - ஆரணி
    3-வது இடம் - விழுப்புரம்

    சிறந்த பேரூராட்சி

    முதல் பரிசு - திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்)
    2-வது இடம் - கருங்கல் (குமரி மாவட்டம்)

    Advertisement

    டாக்டர் வி.மோகனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. டாக்டர் வி. மோகனின் மகள் விருதை பெற்றுக்கொண்டார்.

    English Summary

    Vijay: Chief Minister Vijay hoisted the national flag and paid his respects at the ramparts of Fort St. George in Chennai, and honored senior Congress leader Krishnasamy by presenting him with the 'Thagaisal Tamizhar' Award. Vijay also presented a cheque for ₹10 lakh along with the award.