விஜய் கனவு நனவாகும் தருணம்! குழந்தைகள் சஞ்சய், திவ்யா சாஷா எங்கே? தாத்தா பாட்டி முகத்தில் ஏக்கம்?
சென்னை: தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவியேற்பு நிகழ்வுக்கு யார் யாரோ வந்திருக்கும் நிலையில் அவரது குழந்தைகள் சஞ்சய், திவ்யா ஆகியோரை பார்க்க முடியவில்லை.
தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்கிறார். இந்நாள் தமிழ்நாட்டு மக்களுக்கு மறக்க முடியாத திருநாளாக அமைகிறது. மாநிலம் முழுவதும் உற்சாக ஏற்பாடுகளும், கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ளன.

இந்த விழாவுக்கு ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், வன்னியரசு, செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அது போல் திரிஷா, சஞ்சீவ், அர்ச்சனா கல்பாதி, மார்ட்டின், விஜிபி சந்தோஷம் உள்ளிட்டோர் வந்திருக்கிறார். விஜய்யின் தாய் ஷோபா, தந்தை சந்திரசேகர், விஜய்யின் உறவினர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள்.
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதனால் அவர் வரவில்லை. அது போல் விஜய்யின் குழந்தைகள் சஞ்சய், திவ்யா சாஷா வந்திருக்கிறார்களா என பார்த்த போது அவர்களும் வரவில்லை.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த விழா, தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் பிரம்மாண்டமாக அரங்கேறுகிறது.
முதலமைச்சர் ஜோசப் விஜயைத் தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
பொதுமக்கள் இந்த வரலாற்று நிகழ்வை நேரடியாகக் காணும் வகையில் சென்னைப் பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் 23 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடங்களில் பெரிய எல்.இ.டி மின்னணுத் திரைகள் மூலம் பதவியேற்பு விழா நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
அண்ணா நகர் டவர் பார்க், மெரினா கடற்கரை, கோயம்பேடு மற்றும் தி.நகர் பேருந்து நிலையங்கள், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில்வே நிலையம், பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் பேருந்து பணிமனைப் பகுதி, கத்திப்பாரா சதுக்கம், செம்மொழிப் பூங்கா, தீவுத்திடல் பேருந்து நிலையம், நாகேஸ்வரராவ் பூங்கா, மயிலாப்பூர் குளம் பகுதி, வடபழனி பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் பகுதி, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கடற்கரை, மாதவரம் பேருந்து நிலையம், மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் பூங்கா (L&T அருகில்), அம்பத்தூர் OT பேருந்து நிலையம், தண்டையார்பேட்டை பேருந்து பணிமனைப் பகுதி, அடையாறு பேருந்து பணிமனைப் பகுதி, திருவொற்றியூர் மண்டலம் சன்னதி தெரு (வடிவுடையம்மன் கோவில் அருகில்), மணலி மண்டலம் தேவராஜன் தெரு (வார்டு 22), திரு.வி.க. நகர் மண்டலம் முரசொலி மாறன் பூங்கா ஆகிய 23 இடங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் விஜய் பதவியேற்பு விழாவைக் காண மாவட்ட, உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் இணைந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், இனிப்புகள் விநியோகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் தவெக தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மக்கள் காலை முதலே விழாவிற்காக திரண்டுள்ளனர்.
பதவியேற்பு விழா நிறைவடைந்ததும், புதிய முதலமைச்சர் விஜய் நேராகச் சென்னை தலைமைச் செயலகம் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழ்நாடு மக்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகப் பதியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications