இது லிஸ்டிலேயே இல்லையே.. விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சி.. நயினார், தமிழிசை பங்கேற்பு
சென்னை:தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜய் இன்று
முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இதற்காக விஜய் கோட், சூட் அணிந்து மேடையேறி முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். பாஜக நிர்வாகிகள் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. காங்கிரஸ் முதல் ஆளாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதேபோல சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தன. பெரும்பான்மை கிடைக்காததால் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பது தாமதமாகி வந்தது.

நேற்று ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவுகள் அவருக்கு கிடைத்துவிட்டது. இதனால் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அவரை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ள சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அந்தக் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்த், அதிமுக லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications