CM Vijay: "சி.ஜோசப் விஜய் எனும் நான்".. பாகுபலி சீனை ரீ க்ரியேட் செய்த முதல்வர்
சென்னை:தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். கோட், சூட்டுடன் மேடையேறிய விஜய் ஆண்டவன் மீது ஆணையாக என்று சொல்லி பதவியேற்றுள்ளார். சி. ஜோசப் விஜய் எனும் நான் என்று அவர் சொல்லும்போது அரங்கம் ஆரவாரத்தால் அதிர்ந்தது. பாகுபலி படத்தின் காட்சியை நேரு ஸ்டேடியத்தில் ரீ - கிரியேட் ஆனது.
தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற நிகழ்வு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் விஜய்யுடன் முக்கிய அமைச்சர்களும் பதவியேற்றனர். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பொருளாளர் வெங்கட்ராமன், துணைப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார், செய்தி தொடர்பாளர் ராஜ்மோகன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் டிகே பிரபு, சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற கீர்த்தனா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராகுல் காந்திக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. விஜய் வழக்கமான உடைகளுக்கு பதிலாக கோட், சூட்டுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார்.
விஜய்யை முதல்வராக பதவியேற்க வருமாறு மேடையில் அறிவிக்கப்பட்டதில் இருந்து அரங்கத்தில் ஆரவாரம், விசில் சத்தம் அதிர வைத்தது. பாகுபலி படத்தில் மன்னராக பதவியேற்கும்போது அரங்கம் அதிரும் காட்சி மிகவும் பிரபலம். அதேபோல விஜய் முதல்வராக பதவியேற்கும்போது, சி. ஜோப் விஜய் எனும் நான் என்று அவர் பதவியேற்கும்போது அரங்கம் அதிர்ந்தது. பாகுபலி படக்காட்சியை நேரு ஸ்டேடியத்தில் ரீ - கிரியேட் செய்தார் விஜய்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications