உலகப்போரிலேயே தடை செய்யப்பட்ட கெமிக்கல்? டெல்லி மாணவர் போராட்டத்தில் கொடூரம்.. போலீசாரின் குரூரம்

  • டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு மற்றும் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகத் தொடங்கப்பட்ட மாணவர்கள் போராட்டம் தற்போது டெல்லியை மையமாகக் கொண்டு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

    Advertisement

    காக்ரோச் ஜனதா கட்சி அமைப்பின் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    Advertisement

    மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், சோனம் வாங்சுக்கும் கலந்துகொண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் பாராளுமன்ற வீதிகளில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகள்

    போராட்டத்தின் போது டெல்லி காவல்துறை பயன்படுத்திய கண்ணீர்ப்புகை குண்டுகளின் காலாவதி தேதி முடிந்துவிட்டதாகக் காட்டும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காலாவதியான வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவது மாணவர்களின் உயிருக்கே ஆபத்தானது என்றும், இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும் சமூக ஆர்வலர்களும் மாணவர் அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Advertisement

    பாஸ்பாஜீன்' வாயு உருவாகுமா?

    கண்ணீர்ப்புகை குண்டுகளில் பொதுவாக chlorobenzylidene malononitrile அல்லது chloroacetophenon ஆகிய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    ஒரு கண்ணீர்ப்புகை குண்டு தன் காலாவதி காலத்தைக் கடக்கும் போது அதிலுள்ள ரசாயனக் கலவைகளின் நிலைப்புத்தன்மை குறைகிறது. காலாவதியான குண்டுகளை வெடிக்கச் செய்யும்போது, அது சாதாரணப் புகையாகப் பிரியாமல் ஹைட்ரஜன் சயனைடு, சயனோஜன் குளோரைடு மற்றும் பாஸ்பாஜீன் போன்ற நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களாகவும், அதிகளவிலான கார்பன் மோனாக்சைடாகவும் சிதையும் அபாயம் உள்ளது.
    *
    இது மாணவர்களுக்குக் கடுமையான சுவாச மண்டலப் பாதிப்பு, கண்ணெரிச்சல், நுரையீரல் வீக்கம் மற்றும் நீண்டகால சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.

    Advertisement

    கண்ணீர்ப்புகை பயன்பாடு

    முதலாம் உலகப்போரின் போது பாஸ்பாஜீன், குளோரின் மற்றும் அது தொடர்பான வாயு போன்ற கொடூரமான நச்சு வாயுக்கள் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன. உலகப்போரில் ரசாயன ஆயுதங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் சுமார் 85% பாஸ்பாஜீன் வாயுவால் தான் நிகழ்ந்தன.

    இந்த ரசாயனப் பேரழிவைத் தொடர்ந்து, 1925-இல் கையெழுத்தான ஜெனீவா ஒப்பந்தம், போர்க்களங்களில் விஷ வாயுக்கள் மற்றும் கண்ணீர்ப்புகை உள்ளிட்ட அனைத்து ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்தது.

    1993-ஆம் ஆண்டின் ரசாயன ஆயுதங்கள் மாநாடு, சர்வதேசப் போர்களில் கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தத் தடை விதித்தாலும், ஒரு நாட்டின் உள்நாட்டுச் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கக் காவல்துறையினர் இதைப் பயன்படுத்த விலக்கு அளித்தது.

    Advertisement

    இருப்பினும், காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்துவது அதன் வீரியத்தை மாற்றி, அது ஒரு நச்சுப் பொருளாக மாற வழிவகுக்கும் என்பதால், இது மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகிறது. அதாவது காலாவதியான புகை குண்டு பாஸ்பாஜீன் ஆக மாறி உயிரை பறிக்கும் அபாயம் உள்ளது.

    டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், பீகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மாணவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டம் ஓயாது என CJP ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

    English Summary

    Delhi Student Protest: Outdated Tear Gas Used on Students?