வாகனங்களுக்கு PUC சான்றிதழ் இல்லாவிட்டால் பெட்ரோல் கிடையாது.. டெல்லி அரசு அதிரடி.. பின்னணி!

  • டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், அங்கு நடப்பு சீசனில் முதல் முறையாக காற்று மாசை குறைக்க பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. கிராப் - 1 கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்தார்.

    Advertisement

    தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பெரிய பிரச்சினையாக உள்ளது. அங்கு குளிர் காலத்தில் காற்றின் தரம் அபாய அளவை எட்டுவது தொடர்கதையாகி வருகிறது. காற்றின் தரத்தை மேம்படுத்தும் விதமாக டெல்லி அரசு வாகனங்களுக்கான கட்டுப்பாடு உள்பட பல்வேறு கெடுபிடிகளை விதிக்கும்.

    Advertisement

    டெல்லியில் காற்றின் தரம் மிக மோசம்

    இந்த நிலையில்தான் தற்போது, தென்மேற்கு பருவமழை முடிந்து வட இந்தியாவில் குளிர்காலம் நெருங்கி வருகிறது. இதனால், டெல்லியில் காற்றின் தரம் தற்போதே மோசம் அடைய தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை முதலே அடர்ந்த பனிமூட்டம் போல பிரதான சாலைகள் காணப்பட்டது. இதனால், காற்றின் தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காற்று மாசு தரக்குறியீடு 'மோசம்' என்ற பிரிவுக்கு சரிந்தது.

    வெள்ளிக்கிழமை வரை நீடிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நிலவரப்படி 179-ஆக இருந்த 'மிதமான' காற்றின் தரக்குறியீடு அளவு, தற்போது 200-ஐ கடந்து மோசமான நிலையை எட்டியுள்ளது. (201 முதல் 300 வரை இருந்தால் அது 'மோசம்' பிரிவாகும்). இதனால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    என்னென்ன கட்டுப்பாடுகள்

    * மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
    * டெல்லி முழுவதும் வாகன நிறுத்தக் கட்டணம் இரட்டிப்பாக்கப்படும். மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களுக்கு மட்டும் இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்னெய் விலை சரிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

    வொர்க் ப்ரம் ஹோம்

    * வாகனப் போக்குவரத்தைக் குறைக்கும் நோக்கில், டெல்லி மாநகராட்சி மற்றும் அரசு அலுவலகங்களில் வெவ்வேறு நேரங்களில் பணியைத் தொடங்கும் நடைமுறை மற்றும் வீட்டிலிருந்து பணியாற்றும் முறை (WFH) கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    * வெளிப்புறக் கட்டுமானம் மற்றும் கட்டிட இடிபாடு பணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. திறந்தவெளியில் குப்பைகள் உள்ளிட்டவற்றை எரிப்பதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

    English Summary

    No petrol for vehicles: With air pollution on the rise in Delhi, a series of stringent measures have been implemented for the first time this season to curb the pollution. These include a directive prohibiting the sale of petrol or diesel to vehicles that lack a valid Pollution Under Control (PUC) certificate. Delhi Environment Minister Manjinder Singh Sirsa announced that the GRAP-1 (Graded Response Action Plan - Stage 1) restrictions have now come into effect.