தவெக அரசுக்கு தலை தீபாவளி.. நூலகத்தில் கூடவா ஊழல் பண்ணுவாங்க! தமிழகமே ஷாக்.. அமைச்சர் ஷாஜகான் வேதனை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: சமீபத்தில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த கோவை பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் வாங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தவெகவும் திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், நூலகத்துக்கு வாங்கக்கூடிய புத்தகத்தில் கூட ஊழல் என்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது என தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.

சமீபத்தில் கோவையில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். சுமார் 300 கோடியில் இந்த அறிவுலகம் அமைக்கப்பட்ட போது பல தரப்பினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Shahjahan

ஏழு தளங்கள் கொண்ட இந்த அறிவுலகத்தில் சுமார் 50 கோடி ரூபாய்க்கு புத்தகங்களும், 5 கோடி ரூபாய்க்கு இ புத்தகங்களும் வாங்கப்பட்டது. இதனால் பல தரப்பினரும் இதனை கொண்டாடி மகிழ்ந்த நிலையில் ஒரு பகீர் புகாரினை திடீரென முன் வைத்தார் எழுத்தாளரான பெருமாள் முருகன்.

பெரியார் அறிவுலகம்

அதாவது பெரியார் அறிவுலகத்துக்கு போலி எழுத்தாளர்கள் போலி பதிப்பகங்கள் பெயர்களில் ஏராளமான புத்தகங்கள் வாங்கப்பட்டு, அதுவும் அதிகமான விலைக்கு வாங்கப்பட்டதாக புகார் எழுந்தது. அது மட்டுமல்லாமல் இந்த அறிவு உலகத்துக்கு புத்தகம் அளிப்பதற்காகவே போலி பதிப்பகங்கள் தொடங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் அங்கிருந்த புத்தகங்களில் மிகப்பெரும் வரலாற்றுப் பிழை இருப்பதாகவும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை வைத்து புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டினார்.

போலி நூல்கள் புகார்

இதை அடுத்து இந்த விவகாரம் பெரிதான நிலையில் திமுகவினரும் தமிழக வெற்றிக் கழகத்தினரும் மாறி மாறி புகார் சொல்லி வருகின்றார். மேலும் புத்தகத்தின் பெயர்களும் எழுத்தாளர்களின் பெயர்களும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு ஊழல்கள் வரிசையில் நூலகத்தில் கூட ஊழல் என்பது மிகப் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது என கூறியுள்ளார் அமைச்சர் ஷாஜகான்.

அமைச்சர் ஷாஜகான்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," கோவையில் அமைந்துள்ள பெரியார் நூலகத்தில் நூல்கள் விஷயத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக பெருமகன் என்பவர் ஒரு கட்டுரையை வடித்திருக்கிறார். அந்த கட்டுரையைப் படித்த ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்து போயிருக்கிறது.

நூலக ஊழல்

தமிழகத்தில் பல்வேறு விதமான ஊழல்கள் கடந்த காலங்களில் நடந்ததாக நாம் அறிந்து, அதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு தொடங்கியிருக்கிறது. அதையெல்லாம் விட மிகுந்த வருத்தத்தையும், மிகப்பெரிய ஏமாற்றத்தையும் தரக்கூடிய வகையிலே, ஒரு நூலகத்தில் வாங்கக்கூடிய புத்தகத்தில் கூட ஊழல் என்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

வேதனை

படிக்கக்கூடிய மாணவர்கள் தேடிப்பிடித்து, வரலாற்று ஆய்வுகளை எல்லாம் படிக்கக்கூடியவர்கள் நூலகம் சென்று தங்களுக்கான தகவலைத் திரட்டக்கூடிய ஒரு இடத்திலேயே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருத்தத்தையும், வேதனையையும் தந்திருக்கிறது.

தலை தீபாவளி

​புதிய அரசுக்கு இது தலை தீபாவளி. கடந்த 60-ஆண்டுகளாக மக்கள் இயங்கித் தவித்த, லஞ்சம் ஊழல் இல்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்ற மக்களுடைய ஆவல் நிறைவேற்றக்கூடிய வகையிலே ஒரு ஆட்சி அமைய பெற்றிருக்கிறது. கரும்பு மற்றும் வாழை பயிர் செய்த விளைநிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வேண்டிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+