Kethara Gowri Nonbu 2026: நாளை கேதார கௌரி விரதம்! நோன்பு கயிறு கட்டிக் கொள்ள நல்ல நேரம் எது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளியையொட்டி கேதார கௌரி நோன்பு நாளை கடைப்பிடிக்கப்படும் நிலையில் நோன்பு எடுக்க உகந்த நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த விரதத்தை எப்படி கடைப்பிடிப்பது என்பதை பார்க்கலாம். அமாவாசை இரு நாட்கள் வருவதால் என்றைய தினத்தில் நோன்பு எடுப்பது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

கேதார கவுரி விரதம் என்பது 21 நாட்கள் அனுசரிக்க வேண்டிய விரதமாகும். புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமி திதியில் தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் அமாவாசை வரை இந்த விரதம் தொடரும். தினமும் காலை எழுந்து குளித்து விட்டு சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

kethara gowri nonbu

பின்னர் சிவனுக்கு பூஜை செய்ய வேண்டும். நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு முடிச்சுகளால் கலசத்தை சுற்றி அமைப்பர். இந்த கலசமே பார்வதியாக வழிபடப்படுகிறது. இந்த விரதம் இருப்பவர்கள் தினமும் வெற்றிலை பாக்கு, பழம் தேங்காய் வைத்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.

21 ஆம் நாள் அன்று 21 அதிரசம் , 21 வாழைப்பழம், 21 விரலி மஞ்சள், 21 வெற்றிலை, 21 கொட்டை பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்றிகள் கொண்டு உணவு சமைத்து விரத்தை முடிப்பர். பெண்களுக்கு மிகச் சிறப்பான விரதமாகும். கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி திருமணமான பெண்கள் அனுசரிப்பர். அது போல் திருமணமாகாத பெண்களும் நல்ல கணவர் வர வேண்டும் என பிரார்த்தனை செய்யலாம்.

இந்த பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும். அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது. ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம், பட்டு வஸ்திரம் வைத்து பூவால் அலங்கரித்து சந்தன குங்குமம் இட வேண்டும். விளக்கேற்ற வேண்டும். மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல், பூ சுற்றி மஞ்சள் குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சனை செய்ய வேண்டும்.

அத்துடன் பலவித அலங்காரங்களை செய்து வில்வம், தும்பை போன்ற இலைகளையும் பூக்களையும் வைத்து சிவ நாமங்களை சொல்லி பூஜிக்க வேண்டும். பிறகு நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். ஆண்கள் வலது கைகளிலும் பெண்கள் இடது கைகளிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த விரதம் 21 நாட்களுக்கு அனுசரிக்க வேண்டியதாக இருந்தாலும் உடல்நிலை, சூழ்நிலையை பொருத்து குறைந்த நாட்கள் விரதம் இருக்கலாம். அந்த வகையில் தற்போது ஒரு நாள் மட்டுமே இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள். அந்த ஒரு நாள் என்பதுதான் ஐப்பசியில் வரும் அமாவாசை அன்று ஆகும்.

அந்த வகையில் அமாவாசையானது நாளை காலை 11.28 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் நவம்பர் 9ஆம் தேதி மதியம் 12.32 மணியுடன் முடிகிறது. அமாவாசை நாளில் நோன்பு எடுக்க வேண்டியவர்கள் இந்த நேரத்திற்கேற்ப எடுத்துக் கொள்ளலாம். நோன்பு எடுக்க நல்ல நேரம் எது என்பதை பார்க்கலாம். நாளை காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரையும், பிற்பகல் 1.20 மணி முதல் 2.30 மணி வரையும் நல்ல நேரம்.

இந்த நேரங்களில் நோன்பு கயிறு கட்டி கொள்ளலாம். மாலை நேரங்களில் நோன்பு எடுக்கும் வழக்கம் உடையவர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் எடுத்துக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+