ஹைதராபாத்: 4 ஆண்டுகளாக காதலித்த காதலனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அர்ச்சனா ஆசைப்பட்டுள்ளார்.. ஆனால், திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காதலனுக்கு வீடியோ கால் செய்யவும், அடுத்த சில மணி நேரத்தில் நடந்த சம்பவம் ஹைதராபாத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... அப்படி என்ன நடந்தது?
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அர்ச்சனா சௌதரி மாலிக், ஹைதராபாத்தில் உள்ள மைண்ட்ஸ்பேஸ் பகுதியில் செயல்படும் ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனியில் சீனியர் அசோசியேட்டாக வேலை பார்த்து வருகிறார்.. இதற்காக இவர் மாதாப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்திர நாயக் தாண்டா பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் தங்கி உள்ளார்.
அதே நிறுவனத்தில் வேலை பார்த்த உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பண்டாரி விமல் என்பவருக்கும் அர்ச்சனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் 2 பேரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அர்ச்சனாவுக்கு திருமணமாகியிருந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அர்ச்சனா, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.. அதேபோல விமலுக்கும் ஏற்கனவே திருமணமாகியிருந்தது. அவரது திருமண வாழ்க்கையிலும் விவாகரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி விமலிடம் அர்ச்சனா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.. ஆனால், விமல் திருமணம் தொடர்பாக சரியான பதிலை அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தாராம்.. நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அர்ச்சனா விமலுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது விமல் தனது அம்மாவுடன் சேர்ந்து சேரியாலா பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இருந்துள்ளார்.. அந்த வீடியோ காலின்போது, தனது அறையிலிருந்த ஃபேனில் துப்பட்டா கட்டப்பட்டிருப்பதை அர்ச்சனா விமலுக்கு காட்டியுள்ளார். தன்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் அப்போது கூறியிருக்கிறார்.. உடனே வீடியோ காலையும் அர்ச்சனா துண்டித்து விட்டார்.. இதைப்பார்த்து பதறிப்போன விமல், உடனடியாக அர்ச்சனாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அர்ச்சனா போன் எடுக்கவில்லை. அர்ச்சனாவை தொடர்புகொள்ள முடியாததால் பதற்றமடைந்த விமல், அதிகாலை சுமார் 5.30 மணியளவில் அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்துத் திறந்து உள்ளே சென்றபோது, அர்ச்சனா ஃபேனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அர்ச்சனாவின் மரணம் தொடர்பாக விமலிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அர்ச்சனாவின் மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.ஐடி கம்பெனி காதல் ஜோடி
விமல் - அர்ச்சனா
ஃபேனில் துப்பட்டா
போஸ்ட் மார்ட்டம்