எமனான இன்ஸ்டா..காதலித்து கழுத்தறுத்த காதலன்! காப்பற்றுவதாக கூறி சிறுமியை அடுத்தடுத்த சீரழித்த 3 பேர்

  • கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக, அவரது இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர், உறவினர் மற்றும் அவரது நண்பர்கள் என 4 பேரை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியின் புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    Advertisement

    இந்நிலையில், ஒரு வாரத்துக்குப் பிறகு சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, தன்னை ஒருவர் அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து மற்றொருவருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், 12ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் 20 வயது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பழக்கம் பின்னர் காதலாக மாறிய நிலையில், இருவரும் தனியாக இருந்தபோது இளைஞர் சிறுமியின் அனுமதியின்றி தனிப்பட்ட சில காட்சிகளை பதிவு செய்துள்ளாம்.

    Advertisement

    பின்னர் அந்த காட்சிகளை வைத்து சிறுமியை மிரட்டியதாகவும், சமூக வலைதளத்தின் மூலம் அவற்றை வெளியிடுவதாக அச்சுறுத்தி பலமுறை சிறுமிய பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் அந்த கொஊரான்.
    இந்த பிரச்சினை குறித்து சிறுமி தனது உறவினரான இளைஞரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உதவி செய்வதாக கூறிய அந்த நபரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, அந்த உறவினரின் நண்பருக்கும் இந்த விவரம் தெரியவந்ததாக கூறப்படுகிறது. அவர் சிறுமியை அணுகி, பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி அழைத்துச் சென்று, மற்றொரு நபருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் அங்கிருந்து தப்பிய சிறுமி தனது வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் சம்பந்தப்பட்ட நான்கு பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    Advertisement
    திண்டுக்கல் தொடங்கி.. கன்னியாகுமரி வரை வெளுக்கப்போகும் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்

    மேலும், சிறுமி மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நான்கு பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சிறுமியுடன் சமூக வலைதளம் மூலம் பழகிய இளைஞரும், அவரது உறவினரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து தலைமறைவாக இருந்த மற்ற இருவரின் செல்போன் இருப்பிடத்தை போலீஸார் லொக்கேசன் மானிட்ட உதவியுடன் கண்காணித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னையில் வைத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களை நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும், குழந்தைகளை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்கின்றனர்.

    English Summary

    Four men are arrested under POCSO after a 17-year-old girl allegedly faced repeated sexual abuse and threats linked to Instagram contact.