ஓசூரில் அல்ட்ராவயலெட்.. ரூ.779 கோடி முதலீடு, 5 லட்சம் EVகள்! 4000 பேருக்கு வேலை.. என்ன திட்டம்?

  • கிருஷ்ணகிரி: ஓசூரில் ஏற்கனவே பல கார் மற்றும் டூ வீலர் வாகன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்போது அந்த லிஸ்ட்டில் இன்னொரு பெரிய நிறுவனம் தனது தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் என்பதுடன், வருஷத்துக்கு லட்சக்கணக்கான மின்சார வாகனங்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    பெங்களூருவைச் சேர்ந்த Ultraviolette நிறுவனம் ஓசூரில் புதிய தொழிற்சாலை அமைக்கிறது. இதற்காக சுமார் 779 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஆலையில் முதலில் வருடத்துக்கு 2.5 லட்சம் மின்சார வாகனங்கள் தயாரிக்க முடியும். மக்கள் மத்தியில் அந்த வாகனங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தால், இதை ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்கள் வரை உயர்த்த முடியும்.

    Advertisement

    ஓசூர் தொழிற்சாலை

    இதை இன்னும் எளிமையாக சொல்வதானால், இந்த புதிய தொழிற்சாலை ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்கள் வரை தயாரிக்கும் அளவுக்கு பெரியதாக இருக்கும். அப்படியானால், ஒரே நாளில் அத்தனை வாகனங்களையும் தயாரிக்கப் போகிறார்கள் என்று அர்த்தம் இல்லை. முதலில் 2.5 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் அளவில் தொடங்கி, விற்பனை அதிகரித்தால் உற்பத்தியையும் படிப்படியாக அதிகரிக்க முடியும்.

    இந்த தொழிற்சாலை ஓசூரில் ஏன் அமைகிறது தெரியுமா? ஏனென்றால், அங்கு ஏற்கனவே வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் நிறைய உள்ளன. வாகனங்களுக்கு தேவையான பல்வேறு பொருட்கள், உதிரிபாகங்கள் உள்ளிட்டவை கிடைப்பதற்கான வசதிகளும் இந்த பகுதியில் உள்ளன. அதனால்தான், புதிய நிறுவனத்துக்கும் ஓசூர் முக்கிய ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது.

    Advertisement

    4000 வேலை வாய்ப்பு

    இந்த புதிய தொழிற்சாலை மூலம் சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் நேரடியாக வேலை கிடைப்பவர்கள் மட்டுமல்லாமல், வாகனங்களை கொண்டு செல்லும் பணிகள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், பராமரிப்பு உள்ளிட்ட பல வேலைகளுக்கும் வாய்ப்பு உருவாகலாம்.

    Ultraviolette நிறுவனம் ஏற்கனவே எலக்ட்ரிக் பைக்குகளை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்தின் Tesseract என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரும், Shockwave என்ற மின்சார பைக்குகளும், வாடிக்கையாளர்களிடம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அதுவும், Tesseract ஸ்கூட்டரின் விற்பனை 2027ம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது, கஸ்டமர்களின் எதிர்ப்பார்ப்பை டபுளாக்கி உள்ளது..

    Advertisement

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    இப்போது அந்த நிறுவனத்தின் பெங்களூரு அருகிலுள்ள தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமார் 50000 வாகனங்கள் மட்டுமே தயாரிக்க முடியும். ஆனால் புதிய ஓசூர் தொழிற்சாலையில் இதைவிட பல மடங்கு அதிகமான வாகனங்களை தயாரிக்க முடியும்.

    எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், ஓசூரில் அமையும் இந்த புதிய தொழிற்சாலை தமிழகத்திற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 779 கோடி ரூபாய் முதலீடு, 4000 வேலைவாய்ப்புகள், ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்கள் வரை தயாரிக்கும் வசதி என பெரிய திட்டத்துடன் ஓசூருக்கு வரும் இந்த நிறுவனம், அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தின் மின்சார வாகனத் துறையில் முக்கிய இடத்தை பிடித்துவிடும் என்றே சொல்கிறார்கள்.

    Advertisement

    இந்த ப்ராஜெக்ட் மட்டும் நடந்து முடிந்துவிட்டால் 4 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.. ஓசூரில் வாகன உற்பத்தி இன்னும் அதிகமாகும்.. ஆண்டுக்கு 5 லட்சம் மின்சார வாகனங்கள் வரை தயாரிக்க முடியும்.. இதனால் வாகனங்கள் எளிதாக கிடைக்கும்.. புதிய தொழிற்சாலை வருவதால் உதிரிபாகங்கள், போக்குவரத்து உள்ளிட்ட சுற்றியுள்ள சிறு தொழில்களுக்கும் வேலைவாய்ப்பு பெருகும்.. அதனால்தான், ஓசூர் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது...!!

    English Summary

    Ultraviolette Bengaluru Company’s Hosur Factory.. ₹779 Crore Investment, 5 Lakh EVs and 4,000 Jobs.. What’s Behind It?