தமிழ்நாடு அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருட்டு.. எப்படி நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருடப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் நைஜீரியா கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என சைபர் கிரைம் போலீஸ் சந்தேகம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் வங்கி கணக்கில் ரூ.14 கோடி திருடப்பட்டுள்ளது. அதேபோல் நாகை ஊராட்சி ஒன்றியத்தின் வங்கி கணக்கில் ரூ.3.10 கோடி அதே கும்பல் திருடியுள்ளது. தாம்பரம் ஊராட்சி ஒன்றியத்தின் வங்கி கணக்கில் ரூ.5 கோடி திருடியுள்ளது. இது தொடர்பாக சைபர கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tamil Nadu bank money

புதுச்சேரி மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் கைவரிசை காட்டிய கும்பல், அடுத்தகட்டமாக தமிழக ஊரக வளர்ச்சித்துறையின்கீழ் பராமரிக்கப்படும் வங்கிக்கணக்குகளில் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் டிஜிட்டல் முறையில் மோசடி செய்து திருடியிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடி, நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.10 கோடி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடி என மொத்தம் ரூ.22.10 கோடி அரசு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது

இந்த நிதி அனைத்துமே, 15-வது நிதிக்குழு மானியத்தின்கீழ் ஊரகப்பகுதிகளில் சுகாதார நல மையங்களை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார நல மையக்கட்டிடங்கள் அமைக்கும் திட்டப்பணிகளுக்கான நிதிஒதுக்கீடு செய்யப்ட்டிருந்தது. அந்த பரிவர்த்தனைகளை கண்காணிக்க ஊரக வளர்ச்சித்துறையில் மாநில அளவிலான ஒற்றை மைய வங்கிக்கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் பணிகள் நிறைவடைந்ததற்கான அறிக்கையை அளித்த பின்னரே, சம்பந்தப்பட்ட நிதி விடுவிக்கப்படும். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் வழங்கப்படும். இதுதான் எப்போதுமே நடைமுறையாக பின்பற்றப்படுகிறது.

சென்னையில் இருந்தே இந்த வங்கிகணக்குகள் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சூழலில் இணையவழியாக ஊடுருவி, பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பணம் மாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுகாதார நல மையங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட அரசுத்திட்ட நிதியை மோசடி மூலம் சுருட்டி உள்ளார்கள்.

புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்தில் நடந்துள்ள இந்த மோசடிகளின் பின்னணியில் நைஜீரியாவைச் சேர்ந்த சைபர் குற்றக்கும்பல்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரியில் நடந்தது என்ன

புதுச்சேரி, கோரிமேட்டில் அரசு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் வங்கிக் கணக்கு, இந்திரா சதுக்கம் அருகே உள்ள தனியார் வங்கியில் இருக்கிறது. இந்த கல்லூரியில் பேராசிரியர்கள், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் என 260 பேருக்கு தீபாவளியை முன்னிட்டு 3 மாதத்துக்கான சம்பளம் வழங்குவதற்காக ரூ.8.16 கோடி நிதி விடுவிக்கப்பட்டு அரசு கருவூலம் மூலம் பல் மருத்துவக்கல்லூரியின் வங்கி கணக்குக்கு கடந்த 3-ந்தேதி இரவு வரவாகி இருந்தது.

ஆனால் திடீரென கல்லூரி நிர்வாக வங்கி கணக்கில் ஏற்கனவே இருந்த பணத்துடன் சேர்த்து ரூ.8.85 கோடி காணாமல் போனது. கருவூலத்தில் இருந்த பணம் வரவு வைக்கப்பட்ட 2 மணி நேரத்தில் டிஜிட்டல் முறையில் மர்ம கும்பல் திருடியது. இதுகுறித்து புதுச்சேரி மாநில சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் மோசடி கும்பல் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செயல்பட்டிருந்தார்கள். நைஜிரிய கும்பல் கைவரிசை என்று கூறப்பட்டது. இந்த கும்பல் தான் தமிழகத்திலும் கைவரிசை காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+