சபல டீச்சர்.. காரில் 16 வயது மாணவனை உட்கார வைத்து ஊர் சுற்றி.. அந்த மெசேஜை கண்டு ஆடிப்போன நீதிமன்றம்

  • லண்டன்: இங்கிலாந்தில் 16 வயது பள்ளி மாணவன் என்றும் பாராமல், தான் ஒரு ஆசிரியை என்பதையும் மறந்து, மிக மோசமான முறையில் நடந்துகொண்டுள்ளார் முன்னாள் உடற்கல்வி ஆசிரியை ஒருவர்.. கடைசியில் இந்த வழக்கு கோர்ட் வரை சென்றுவிட்டது.. இந்த டீச்சருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகள் உள்ளன.. ஆனாலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார்.. என்ன நடந்தது?

    Advertisement

    சவுத்தாம்ப்டனில் செயல்பட்டு வருகிறது பிட்டர்ன் பார்க் பள்ளி.. இங்கு பணியாற்றி ஆசிரியைதான் 30 வயது பிரான்வென் ஜேம்ஸ்.. கடந்த 2022ல் அதே பள்ளியில் 16 வயது மாணவருடன், ஜேம்ஸுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    பள்ளி ஆசிரியை செய்த காரியம்

    முதன்முதலில் அந்த மாணவரை சினாப்சாட் ஆப்பில் நண்பராக சேர்த்திருக்கிறார் டீச்சர் ஜேம்ஸ்.. இதற்கு பிறகு 2 பேரும் தொடர்ந்து மெசேஜ்கள் பேசி வந்துள்ளனர். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த பேச்சு, நாளடைவில் நெருக்கமானதாக மாறியிருக்கிறது. பிறகு இருவரும் காரில் வெளியில் சென்று ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளனர். பிறகு தன்னுடைய வீட்டுக்கு மாணவனை அழைத்து சென்றுள்ளார் டீச்சர்.. இந்த நெருக்கம் பின்னர் பாலியல் தொடர்பாக மாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது

    இதற்கு பிறகு இவர்கள் இருவரின் விஷயம், பள்ளியிலும் பரவ ஆரம்பித்து விட்டது.. ஒருநாள் அவர்களுக்கிடையேயான செல்போன் மெசேஜ்களை, வகுப்பிலுள்ள ஒரு மாணவர் பார்த்துவிட்டு, பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.. உடனே நிர்வாகம், மாணவரிடம் விசாரணை நடத்தியது.. ஆனால் ஆசிரியை மீது தனக்கு தவறான உறவு இல்லை என்று மாணவர் மறுத்துவிட்டார்.

    Advertisement

    16 வயது பள்ளி மாணவன்

    அப்போதும் இந்த விஷயம் முடியாமல், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சென்றது.. உடனே அவர்களும் பள்ளிக்கு வந்தார்கள்.. அவர்களிடமும் இதே பதிலை அடித்து சொன்னார் மாணவர்.. காரணம், தன்னுடைய ஆசிரியை இந்த விஷயத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே, மாணவர் உண்மையை மறைத்து விட்டார்..

    அப்போதும் இந்த விஷயம் முடியாமல், போலீசாரின் கவனத்துக்குச் சென்றது. விசாரணை நடத்தப்பட்டு, ஜேம்ஸ் மீது 16 வயது மாணவருடன் தொடர்புடைய 4 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

    இறுதியில் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தபோது, மாணவரின் வாக்குமூலமும், ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் தெரிவித்த தகவல்களும் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டன. இந்த வழக்கில் ஜேம்ஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்தது.

    Advertisement

    ஆசிரியை ஜேம்ஸ் குற்றச்சாட்டுகள்

    ஆனால், ஆசிரியை ஜேம்ஸ் தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். சினாப்சாட்டில் வெறும் நட்பாக மட்டுமே மாணவனை ஏற்றுக்கொண்டதாகவும், பாலியல் உறவு வைத்துக் கொள்ளவில்லை என்றும், அவருடன் காதல் அல்லது பாலியல் தன்மை கொண்ட மெசேஜ்களை பரிமாறிக் கொள்ளவில்லை என்றும் சாதித்தார்..

    அதுமட்டுமல்ல, மொத்த பழியையும் அந்த மாணவர் மீதே வீசினார்.. ஒரு ஆசிரியையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக நண்பர்களிடம் பெருமையாகக் காட்டிக்கொள்ளவே, இப்படியான கட்டுக்கதைகளை மாணவன் அவிழ்த்து விட்டிருக்கலாம் என்றும், பிளேட்டை திருப்பி போட்டார்.

    தண்டனை என்னவாக இருக்கும்?

    இப்படி ஆசிரியை ஜேம்ஸ் தன்னை நிரபராதி என்று காட்டிக்கொள்ள கோர்ட்டில் வாதாடிய நிலையில், அவர் தொடர்பான இன்னும் பல குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தன.. 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு பெண் மாணவிகளுடன் அவர் தவறாக நடந்துகொண்டதாக மேலும் 9 குற்றச்சாட்டுகள் இருந்தன. அந்த 9 குற்றச்சாட்டுகளையும் ஜேம்ஸ் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்தார்

    Advertisement

    இதுமட்டுமல்ல, 2018ல், ஒரு பள்ளியில் பணியாற்றியபோது, மாணவர் ஒருவருடன் இப்படித்தான் தவறாக நடந்து கொண்டாராம் ஜேம்ஸ்.. இதற்காக எழுத்துப்பூர்வ எச்சரிக்கையும் வழங்கப்பட்டிருந்ததாம். இதையும் ஜேம்ஸ் ஒப்புக் கொண்டார்.. ஆனால் 16 வயது மாணவனிடம் மட்டும் தவறாக நடந்து கொள்ளவில்லை என ஜேம்ஸ் தொடர்ந்து மறுத்து வந்தார்.

    இறுதியில், 16 வயது மாணவர் தொடர்பாக சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளில் மூன்றில் ஜேம்ஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2 சிறுமிகள் தொடர்பான 9 குற்றங்களையும் அவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஜேம்ஸுக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது...!!

    English Summary

    Unthinkable Act With a 16 year old Student.. Teacher Bronwen James' Case Reaches Court, What Happened?