லண்டன்: பிரிட்டனின் விமான நிலையங்களில் ஏற்பட்ட பெரிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிக்கின்றன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பிரிட்டனின் தேசிய விமான போக்குவரத்து சேவையின் விமான செயலாக்க அமைப்பில் இந்த திடீர் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது இந்த தொழில்நுட்ப பிரச்சனை சரி செய்யப்பட்டாலும், ஏற்கெனவே தேங்கியுள்ள விமானங்களை மீண்டும் இயக்க கூடுதல் நேரமாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரிட்டனின் தேசிய விமான போக்குவரத்து சேவை என்பது, அந்நாட்டின் வான்வெளி போக்குவரத்தை கட்டுப்படுத்தும் முதன்மை அமைப்பாகும். இதில், Flight Procssing System என்பது விமானங்கள் புறப்படுவது, தரையிறங்குவது மற்றும் அதன் பாதைகளை திட்டமிடுவது போன்ற மிக முக்கியமான பணிகளை ஆட்டோமேட்டிக் முறையில் செய்யும் ஒரு கணினி அமைப்பாகும். இந்த அமைப்பில்தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. சிக்கல் ஏற்பட்டவுடன் விமானங்களின் பறக்கும் திட்டங்களை தானியங்கி முறையில் செயல்படுத்த முடியவில்லை. நம்மூரில் பேருந்துகளை பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் பஸ் வழங்கப்படும். அதுபோல விமானங்கள் கிளம்ப, ரூட் போட்டு கொடுக்கும் வேலையை செய்து வந்த அமைப்பு.. வேலையை காட்டிவிட்டதால், விமானங்கள் புறப்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போதைக்கு இந்த டெக்னிக்கல் பிரச்சனை சரி செய்யப்பட்டு சிஸ்டம் மீண்டும் பழைய மாதிரி இயக்கப்பட்டாலும், 15க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் விமான பயணங்கள் கடுமையாக தாமதமாகி வருகின்றன. லண்டனின் ஹீத்ரோ, கேட்விக், லூட்டன், பர்மிங்காம், எடின்பர்க், கிளாஸ்கோ மற்றும் டப்ளின் ஆகிய விமான நிலையங்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஹீத்ரோ விமான நிலையத்தில் மட்டும் சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 367 விமானங்கள் லேட்டாக இயக்கப்பட்டிருக்கின்றன. டெக்னிக்கல் பிரச்சனை காரணமாக, பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றம் ஈஸிஜெட் ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர KLM லுஃப்தான்சா மற்றும் சுவிஸ் ஆகிய விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.என்ன நடக்கிறது பிரிட்டனில்?
விமான சேவைகள் ரத்து
பிரிட்டன் முழுவதும் பாதிப்பு