ஆட்டமே ஆரம்பம்.. வயிற்றின் மீது உரல் வைத்து உலக்கையால் இடித்து! விஜய் கெட்டப்பில் வில்லியனூர் அம்மன்

  • புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஒரு கிராமத்தில் நடைபெற்ற கோவில் தேரோட்டத்தில், சட்டசபையில் நடிகர் விஜய் கைகாட்டிய பாணி மற்றும் கையில் துப்பாக்கி மற்றும் ரத்தக்கரையுடன் கூடிய கத்தியோடு அம்மனுக்கு பிரம்மாண்ட கட்டவுட் பேனர் வைக்கப்பட்ட வினோத சம்பவம் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பேனரும், கட்-அவுட்டும் சோஷியல் மீடியாவிலும் வைரலாகிகொண்டிருக்கிறது.

    Advertisement

    புதுச்சேரி வில்லியனூர் அடுத்துள்ளது மேல்சாத்தமங்கலம் என்ற கிராமம்.. இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கழுநீரம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த கோவிலின் முதலாம் ஆண்டு தேர் உற்சவம் கடந்த 6ம் தேதி மிகக் கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    Advertisement

    புதுச்சேரி வில்லியனூர் அம்மன்

    விழா தொடங்கிய நாளிலிருந்தே தினமும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் தடையின்றி நடைபெற்று வந்தன. அதுமட்டுமல்லாமல் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்க, தெருக்கூத்து, இன்னிசை கச்சேரி மற்றும் ஆடல் பாடல் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    இந்தத் திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக, சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முதலாம் ஆண்டு தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்த செடல் அணிதல், அலகு குத்துதல் போன்ற பல்வேறு பக்திக் பரவச மூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    Advertisement

    உரலை வைத்து உலக்கையால் இடித்து

    அதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய ஒரு வினோதமான நேர்த்திக்கடனும் நடைபெற்றது. அதாவது, பக்தர் ஒருவரை தரையில் படுக்க வைத்து, அவர் வயிற்றின் மீது உரலை வைத்து, உலக்கையால் இடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் அபூர்வ நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை பார்த்த சுற்றியிருந்த பக்தர்கள் அனைவரும் பயத்திலும், வியப்பிலும் ஆச்சரியத்திலும் அம்மனை வழிபட்டனர். திரளான பக்தர்கள் இந்த வினோத வழிபாட்டில் பங்கேற்று செடல் தரித்து தங்களது வேண்டுதல்களை பக்தி பூர்வமாக நிறைவேற்றினர்.

    பக்தர்கள் பரவசம்

    இதன் தொடர்ச்சியாக, கலர் கலர் பூக்களாலும், லைட்டுங்குகளாலும் அழகாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அருள்மிகு ஸ்ரீ செங்கழுநீரம்மன் எழுந்தருளினார். "அரோகரா" கோஷம் விண்ணைப் பிளக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். மேல்சாத்தமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அம்மனைத் தரிசித்து அருள் பெற்றனர்.

    Advertisement

    ஆனால், இந்த விழா முழுவதிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு அதிர்ச்சி கலந்த சுவாரசியமான விஷயம் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் தான்! விழாவிற்கு வருகை தந்த பக்தர்களை வரவேற்கும் வகையில் வைக்கப்பற்றிருந்த அந்தப் பேனரில், "இனிமேதான் ஆட்டமே ஆரம்பம்" என்ற பஞ்ச் வாசகத்துடன் அம்மன் காட்சியளித்தார். அதுவும் சாதாரண வடிவில் அல்ல!

    விஜய் கெட்டப்பில் அம்மன்

    சமீபத்தில் சட்டப்பேரவையில் நடிகர் விஜய் கைகாட்டிப் பேசிய அதே சைகை வேடத்திலும், அம்மனின் கையில் துப்பாக்கி மற்றும் ரத்தக்கரை படிந்த கத்தியுடனும் அந்த பிரம்மாண்டமான கட்டவுட் பேனர் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் வியப்பின் எல்லைக்கே சென்றனர்.

    Advertisement

    9 வருஷத்துக்கு பிறகு நடந்த இந்த தேரோட்டம் அப்பகுதியில் பெரும் பேச்சாக மாறியுள்ளது. சோஷியல் மீடியாவிலும் இந்த பேனர் வைரலாகி வருகிறது.

    English Summary

    Puducherry Villianur Temple Festival.. Amman in Vijay Style After Bizarre Ritual