குற்றாலத்தில் ஆசையாக குளிக்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி.. ஆர்ப்பரித்த தண்ணீரில் மூச்சுத்திணறல்!

  • தென்காசி: தென்காசி மாவட்டத்தில் குற்றால சீசன் தொடங்கி உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து ஆனந்த் குளியல் போடுகின்றனர். இந்நிலையில் தான் குற்றாலம் மெயினருவில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்த பெண் மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்தார்.

    Advertisement

    சென்னை உள்பட வடமாவட்டங்களில் தற்போது வெயில் கொளுத்து வருகிறது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

    Advertisement

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயினருவில் பராமரிப்பு பணியின் காரணமாக மக்களுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

    ஆனால் நேற்று முதல் மெயினருவியிலும் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் வார இறுதி நாட்கள் என்பதால் நேற்றும், இன்றும் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் தான் நேற்று குற்றாலம் மெயினருவில் ல் குளித்துக் கொண்டிருந்த பெண் மூச்சுத் திணறல் காரணமாக மயங்கி விழுந்தார்.

    குற்றாலம் மெயினருவியில்பெண்கள் குளிக்கும் பகுதி குளித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறலால் அவர் பாதிக்கப்பட்டார். அருவியிலேயே அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    Advertisement

    குற்றாலம் மெயினருவியில் சீசன் காலங்களில் அதிகமானவர்கள் கூடுவார்கள். இதனால் நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இதுவரை அந்த வசதி ஏற்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் மேற்கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை குற்றாலம் சீசன் முடியும் வரை குற்றாலம் பிரதான அருவிப்பகுதியிலும் ஐந்தருவி பகுதியில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    English Summary

    The tourist season has begun in Tenkasi district, with water cascading down all the waterfalls. Consequently, large numbers of visitors from outside the area have arrived to enjoy the baths. Amidst this, a woman bathing in the roaring waters of the Main Falls at Courtallam fainted due to breathlessness.