தனியார்வசம் போகும் முக்கிய தமிழக ஏர்போர்ட்.. 50 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்.. அடுத்து என்ன நடக்கும்?

  • திருச்சி: நாட்டில் உள்ள 11 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 11 விமான நிலையங்களை 5 பேக்கேஜாக பிரித்து, அவற்றை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெரிய விமான நிலையங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தி சிறிய விமான நிலையங்களுக்கு மானியம் வழங்கி, அவற்றை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    Advertisement

    நமது நாட்டில் விமான போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், விமான நிலையங்களை நிர்வகிக்கும் பணிகளை மத்திய அரசு மெல்ல தனியாருக்கு ஒப்படைத்து வருகிறது. ஏற்கனவே, நாட்டின் பல்வேறு தனியார் விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தனியார்மயம்

    இந்தச் சூழலில் தான் அடுத்தகட்டமாக 11 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவை 5 பேக்கேஜாக பிரித்து, தனியாரிடம் ஒப்படைக்கப்படும். பொதுவாக பெரிய விமான நிலையங்களில் வருவாய் அதிகம் கிடைக்கும். அதேநேரம் சிறிய விமான நிலையங்களில் போதிய வருவாய் கிடைக்காது. இதனால் சிறிய விமான நிலையங்களை இயக்குவது பெரும் சிரமமாக மாறிவிடும்.

    அதை சமாளிக்கவே பெரிய விமான நிலையங்களின் வருவாயை பெற்று, அதை சிறிய விமான நிலையங்களுக்கு மானியமாக வழங்கி, அவற்றை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க இந்த திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. பிபிபி எனப்படும் அரசு- தனியார் பங்களிப்பு முறையில் ஒவ்வொரு விமான நிலைய பேக்கேஜும் ஒரே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இதற்கு பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் தலைமையிலான பிபிபிஏசி (Public Private Partnership Appraisal Committee), ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

    Advertisement

    திருச்சி ஏர்போர்ட்

    அதன்படி அமிர்தசரஸ் - காங்க்ரா-காகல் ஆகிய 3 ஏர்போர்ட்கள் முதலாவது பேக்கேஜில் உள்ளன. வாரணாசி - கயா - குஷிநகர் 2வது பேக்கேஜில் இருக்கும் நிலையில், புவனேஸ்வர் - ஹூப்ளி 3வது பேக்கேஜிலும், ராய்ப்பூர் - அவுரங்காபாத் 4வது பேக்கேஜிலும் உள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த திருச்சி விமான நிலையமும் - ஆந்திராவில் உள்ள திருப்பதி விமான நிலையமும் 5வது பேக்கேஜில் உள்ளன.

    எப்படி இயங்கும்?

    இந்த விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்போது, விமான நிலையத்தை தினசரி நடத்துவது, நிர்வாகம் மற்றும் அதை மேம்படுத்தும் பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும். விமான நிலையத்தின் முனையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை இந்த தனியார் நிறுவனங்களே கவனித்து கொள்ளும். சுமார் 50 ஆண்டுகள் குத்தகை காலத்திற்கு இவை தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.

    Advertisement

    மறுபுறம் விமான போக்குவரத்து கட்டுப்பாடு, தகவல் தொடர்பு, கண்காணிப்பு சேவைகளை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்ந்து மேற்கொள்ளும். AAIயின் துணை நிறுவனமான AAICLAS தொடர்ந்து சரக்கு கையாளுதல் பணிகளை மேற்கொள்ளும்.

    மத்திய அரசு ஆலோசனை

    அதேநேரம் சில நேரங்களில் ஒரே தனியார் நிறுவனம் வசம் பல ஏர்போர்ட்கள் சென்றுவிடுகின்றன. இதுபோல நடக்கும்போது தனியார் நிறுவனங்களிடம் அதிக அதிகாரம் குவியும் என அஞ்சப்படுகிறது. மேலும், இதனால் அதிக கடன் சுமை ஏற்பட்டு வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரே நிறுவனத்துக்கு அதிக பேக்கேஜ்களை வழங்குவதை தடுத்து, அதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இதற்கான வரம்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

    Advertisement

    அனுமதி

    மேலும், இந்த துறையில் போட்டியை அதிகரிக்கும் வகையில், விமானத் துறையில் மட்டுமின்றி, பிற உள்கட்டமைப்பு துறைகளில் அனுபவம் பெற்ற நிறுவனங்களும் இந்த ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளன. பயணிகள் போக்குவரத்து, நிலம் கிடைக்கும் தன்மை, வருவாய் உள்ளிட்ட பல காரணங்களை கருத்தில் கொண்டே இந்த பேக்கேஜ் உருவாக்கப்பட்டுள்ளன. பெரிய விமான நிலையங்களுக்கு அருகே இருக்கும் சிறிய விமான நிலையங்களே ஒரு பேக்கேஜ்ஜிற்குள் போடப்பட்டுள்ளன.

    தனியார் வசம் ஒப்படைக்கும்போது ஓவர் நைட்டில் எல்லாம் மாறிவிடாது. தற்போதுள்ள ஏஏஐ ஊழியர்கள் தொடர்ந்து ஓராண்டு அங்கேயே வேலை செய்வார்கள். அதன் பின்னர், தனியார் நிறுவனம் ஏஏஐ ஊழியர்களில் 60% பேரை குறைந்தது 3 ஆண்டுகள் வரை பணியில் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகே தேவையான வகையில் மறுசீரமைப்பு செய்து கொள்ளலாம்.

    English Summary

    Central Government plans to privatize 11 Indian Airports by grouping them into five packages under the PPP model(தனியார் வசம் செல்லும் விமான நிலையங்கள்): Trichy and Tirupati airports are part of the fifth package.