ஆர்எஸ்எஸ்-க்கு தடை? டிரம்புக்கு போன பரிந்துரை.. பாகிஸ்தானில் பிறந்த USCIRF தலைவர் பிளான்.. பின்னணி

  • வாஷிங்டன்: மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பாக உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது தடைகளை விதிக்க அமெரிக்காவின் USCIRF ஆணையத்தின் தலைவரான பாகிஸ்தானில் பிறந்த ஆசிஃப் முகமது கோரிக்கை வைத்துள்ளது. விரைவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்த கோரிக்கை சென்றுள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அமெரிக்கா தடை போடுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    ஆர்எஸ்எஸ் (RSS) மீது தடைகளை விதிக்க அமெரிக்க அமைப்பான USCIRF கோரிக்கை; காஷ்மீர் விவகாரத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளி நபர் இதன் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.

    Advertisement

    மத்தியில் ஆளும் கட்சியாக பாஜக உள்ளது. இதன் தாய் அமைப்பு தான் ஆர்எஸ்எஸ். ஏற்கனவே இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம், வரி சார்ந்த விவகாரங்களில் தற்போது பிரச்சனை உள்ளது.

    இப்படியான சூழலில் தான் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு USCIRF கோரிக்கை வைத்துள்ளது.

    USCIRF என்பதன் விரிவாக்கம் US Commission on International Religious Freedom என்பதாகும். தமிழில் 'சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்' என்று சொல்லலாம். இந்த ஆணையம் தான் அமெரிக்காவில் இருந்து கொண்டு ஏதேனும் நாட்டின் மத சுதந்திரம் சார்ந்து மீறல்கள் நடப்பதை கண்காணிக்கும் பணியை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. மதச்சுதந்திரம் பாதிக்கப்படும்போது குறிப்பிட்ட அந்த நாடு அல்லது தனிநபர்கள் மீது தடை உள்பட பிற நடவடிக்கைகைள மேற்கொள்ள அமெரிக்க அதிபர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றுமு் அமெரிக்க நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றுக்கு பரிந்துரை செய்யும். இந்த ஆணையம் கட்சி சார்பற்று, நடுநிலையான தன்மையை செயல்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்நிலையில் தான் தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை கோரும் 'சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்' தலைவராக ஆசிஃப் மஹ்மூத் உள்ளார். இவர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர். தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார்.

    இவர் தற்போது பாகிஸ்தான் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். இதற்கு முன் காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். இந்நிலையில் தான் ஆசிஃப் மஹ்மூத் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினராக உள்ளார். ஆர்எஸ்எஸ் என்பது குடையாகவும், அதன் கீழ் பல அமைப்புகளும் செயல்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ்ஸின் துணை அமைப்புகள் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன. இப்போது ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத் அமெரிக்கா வர திட்டமிட்டுள்ளார். இதனால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று டொனால்ட் டிரம்ப் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    Advertisement

    அதேபோல் அமெரிக்காவின் இந்த ஆணையத்தின் ஆணையர் ஜீன் மில்ஸ் எக்ஸ் பக்கத்தில், ''இந்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும் கூட ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு அமெரிக்காவில் உயர்மட்டச் சந்திப்புகளோ அல்லது தூதரக ரீதியிலான மரியாதைகளோ அளிக்கப்படக்கூடாது. மாறாக, மத நம்பிக்கை சுதந்திரம் மீறல்களுக்குப் பொறுப்பான ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மீது தடைகளை விதிப்பதில் அமெரிக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்'' என கூறியுள்ளார். இந்த ஆணையத்தின் ஆணையர் அமெரிக்க அதிபர், ஆளும் குடியரசுக் கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் தலைவர்களால் நியமனம் செய்யப்படுவார். இவர்களின் பரிந்துரையை அமெரிக்க அரசு பல சந்தர்ப்பங்களில் ஏற்றுள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் மீதான தடையை ஏற்குமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை தடை விதிக்கப்பட்டால் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அமெரிக்காவிற்கு செல்வதில் பிரச்சனை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Asif Mahmood, the Pakistan-born chair person of the US Commission on International Religious Freedom (USCIRF), has called for a ban on the RSS—the parent organization of India's ruling BJP. This request has been submitted to US President Donald Trump at a time when RSS chief Mohan Bhagwat is planning an upcoming visit to the United States. Consequently, the question has arisen: will the US impose a ban on the RSS?