பூமியின் ஈர்ப்பு விசை இன்று 7 செகண்ட்ஸ் இல்லாமல் போகிறதா? பகீர் கிளப்பும் பதிவுகள்! நாசா சொல்வது என்ன

  • வாஷிங்டன்: பூமி தனது ஈர்ப்பு விசையை இன்று 7 வினாடிகள் வரை இழக்ககூடும் என்றும் கருந்துளையில் ஏற்படும் மோதல்களினால் ஏற்படும் அலைகள் பூமியை நோக்கி வரும் போது இந்த நிகழ்வு ஏற்படும் எனவும் இதனால், பூமியில் உள்ள பொருட்கள் காற்றில் மிதக்கும்.. பின்னர் விழுந்து நொறுங்கி பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல தகவல் பரவிய நிலையில், இதன் உண்மைத்தன்மை குறித்து நாசா விளக்கம் அளித்துள்ளது.

    Advertisement

    நாம் வாழும் இந்த பூமி பல்வேறு பேரதிசயங்களை கொண்டது. குறிப்பாக பூமியில் நாம் இயல்பாக மேற்கொள்ளும் அத்தனை பணிகளுக்கும் முக்கியமாக இருப்பது அதன் ஈர்ப்பு விசைதான். பூமி தன்னை நோக்கி பொருட்களை ஈர்ப்பதால்தான் நாம் பூமியில் நிற்கவும், பொருட்கள் கீழே விழவும் நிலையாக இருக்கவும் முடிகிறது.

    Advertisement

    பூமி ஈர்ப்பு விசையை இழக்கும்

    ஈர்ப்பு விசை இல்லை என்றால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள் மிதப்பது போலத்தான் நாம் ஒவ்வொரும் மிதக்க வேண்டியிருக்கும்.. சரி அதற்கு என்ன இப்போ? என்று மனதில் நினைக்கலாம். பூமி இன்று தனது ஈர்ப்பு விசையை இழக்கப்போவதாகவும் இதனால் பெரும் அபாயம் காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல தகவல் ஒன்று பரவி வருகிறது. மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிய நிலையில், இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும் முக்கிய விளக்கத்தை கொடுத்துள்ளது. அதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    7 செகண்ட்கள் இழக்கக்கூடும்

    ஆகஸ்ட் 12 ஆம் தேதியான இன்று பூமி தனது ஈர்ப்பு விசையை 7 செகண்ட்கள் இழக்கக்கூடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வலைத்தளங்களில் தீயாய் தகவல் ஒன்று பரவி வந்தது. இன்று அல்ல.. கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே இந்த தகவல் பரவி வந்தது. மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக கருந்துளையில் மோதல்கள் ஏற்பட்டு, அதன் ஈர்ப்பு அலைகள் பூமியை நோக்கி வருவதாகவும், அவை எப்படியோ.. பூமியின் ஈர்ப்பு விசையை செயல் இழக்க வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.

    நாசாவின் ரகசிய திட்டமான புரஜாகெட் ஆங்கர் இதனை கண்டறிந்ததாகவும், பூமியை சில நொடிகள் எடையில்லாததாக மாற்றும் நிகழ்வு நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதனை எதிர்கொள்ள அமெரிக்கா 89 பில்லியன் டாலர் தொகையில் திட்டம் ஒன்றை வகுத்து இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.

    Advertisement

    கட்டிடங்கள் சீட்டு கட்டு போல் சரியும்

    அதாவது குறிப்பிட்ட மக்களை காப்பாற்ற பதுங்கு குழிகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், விலங்குகள், கார்கள், ரயில்கள், பாறைகள், கடல்கள் எல்லாம் காற்றில் மிதக்க கூடும். கட்டிடங்கள் சீட்டு கட்டு போல சரிந்து விழும். பூமி மீது அனைத்தும் விழுந்து நொறுங்கும் என பகீர் கிளப்பும் வகையில் அந்த பதிவுகளில் கூறப்பட்டு இருந்தது. இந்த பதிவுகள் மக்களிடையே அதிவேகமாக பரவிய நிலையில், நாசா அப்படியான எந்த ஒரு நிகழ்வும் நடக்கப்போவது இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    நாசா விளக்கம்

    இது குறித்து நாசா கூறுகையில், "பூமியின் ஈர்ப்பு விசை என்பது அதன் இயற்கையான நிறையின் (Mass) மூலம் பெறுகிறது. பூமி தனது ஈர்ப்பு விசையை இழக்க வேண்டும் என்றால், மேண்டில், கிரஸ்ட், கடல், வளிமண்டலம் ஆகியவற்றை இழக்க வேண்டும். இதுதான் அடிப்படை அறிவியல் உண்மை. எனவே, பூமி ஆகஸ்ட் 12 ஆம் தனது ஈர்ப்பு விசயை 7 செகண்ட்கள் இழக்கும் என்பது உண்மையான தகவல் இல்லை" என்று விளக்கம் அளித்துள்ளது.

    English Summary

    Earth gravity: NASA has issued a clarification regarding viral social media rumors claiming that Earth would lose its gravity for seven seconds today—allegedly due to waves from black hole collisions—causing objects to float in mid-air before crashing down and causing massive destruction.