புகார் வைத்த புஸ்ஸி.. அப்படி சொல்லாதீங்க ..சட்டென குறுக்கிட்ட ஜான்! உடனே மீட்டிங்கிற்கு அழைத்த விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர்கள் மற்றும் தவெக எம்.எல்.ஏ.க்களுடன் நாளை கலந்துரையாட விருக்கிறார் தவெக தலைவரும் முதல்வருமான விஜய். இதற்காக, தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அமைச் சர்கள் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவதால் அவர்களுடன் விஜய் விவாதிக்கவே இந்த அழைப்பு என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், இப்படி ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கான முடிவு எப்போது எடுக்கப்பட்டது? எதனால் எடுக்கப்பட்டது? என்கிற தகவல்கள் கிடைத்து ள்ளன.

தவெக அரசின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், வெங்கட் ராமன், அருண்ராஜ் மற்றும் விஜய்யின் தனிச் செயலர் ஜெகதீஸ் பழனிச்சாமி ஆகியோர், தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள், விஜய்யை சந்தித்தனர். தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர். முதல்வர் விஜய், கிறுஸ்துவர் என்றாலும் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். அதேபோல, கிறுஸ்துவரான ஜான் ஆரோக்கியசாமிக்கு, தீபாவளி பண்டிகை மீது ஈர்ப்பு இல்லையென்றா லும், வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டார்.

பண்டிகையை முன்னிட்டு இந்த சந்திப்பு நடந்தாலும், கடந்த 2 வாரங்களாக முதல்வர் விஜய்க்கு கிடைத்து வரும் ரிப்போர்ட்டுகளின் அடிப் படையிலேயே அவர்களை தனது இல்லத்திற்கு அழைத்திருந்தார்.

What is the real reason behind the CM Vijay Calling for the Urgent Meeting

இந்த சந்திப்பில் தீபாவளி வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டதற்கு பிறகு, கடந்த 2 வாரங்களாக பத்திரிகைகள் மற்றும் சோசியல் மீடியாக்களில் வரும் செய்திகள் மற்றும் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி சொல்லி வரும் கருத்து க்களை மையப்படுத்தி கேள்வி எழுப்பியிருந்தார் விஜய்.

மிகச்சுருக்கமாக, நம்முடைய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அதிர்ப்தியில் இருப்பதாக வரும் தகவல்கள் குறித்து விஜய் கேள்வி கேட்டு ள்ளார். அப்போது புஸ்சி ஆனந்த், நம் எம்.எல்.ஏ.க்களிடம் அதிர்ப்தி இருப்பதுங் கிறது உண்மைதான் தலைவர். அது, உங்களை சந்திக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் அவர்களுக்கு இருக்கிறது என சொல்லியிருக்கிறார்.

அப்போது குறுக்கிட்ட ஜான் ஆரோக்கியசாமி, ஆதங்கம்னு சொல்லுங்க ; அதிர்ப்தின்னு சொல்லாதீங்க என மறுத்துச் சொன்ன அவர், எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் ஏதேனும் ஒரு வகையில் அமைச்சர்களின் கண்ட்ரோலில் தான் இருக்காங்க. அவர்களின் தேவையை அமைச்சர்கள் கவனித்துக்கொள்கிறார் கள். அதிர்ப்தி எங்கிருந்து வருது? என்றார் சற்று கோபமாக.

அதிர்ப்தி, ஆதங்கம் என்கிற விவாதம் நடந்த நிலையில், திமுக-அதிமுக கட்சிகளிடம் நம் எம்.எல்.ஏ.க்கள் சிக்கியிருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் தந்துள்ளது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். அமைச்சர்கள் ஆதவ்வும், நிர்மல்குமாரும் இதனை ஆமோதித்துள்ளனர்.

இதனையடுத்து பேசிய அவர்கள், எம்.எல்.ஏ.க்களை ஒருமுறை நீங்கள் சந்தித்து பேச வேண்டும். ஒரே சமயத்தில் தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரை யும் நீங்கள் சந்திக்க வேண்டும் என்று சொல்ல, உங்களை சந்திக்க முடிய வில்லையே என்கிற ஆதங்கம் அமைச்சர்கள் சிலருக்கும் இருக்கிறது. அதனால், எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சர்களையும் அழைத்து நீங்கள் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஜான்.

இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் , மாவட்ட நிர்வாகிகள் அடிக்கடி சர்சைகளில் சிக்குகிறார்கள். பல்வேறு க்ரைம் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். இதுதான் எதிர்க்கட்சிகளின் அரசியலுக்கு பயன்படுகிறது. ஆட்சி மீது எந்த குற்றத்தையும் சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள், நம் கட்சியினர் ஏற்படுத்தும் சர்ச்சைகளை அரசியலாக்குகிறார்கள். 5 தொகுதி களுக்கான இடைத்தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில் இத்தகைய சர்சைகள் கட்சிக்கும் உங்களுக்கும் கெட்டப்பெயரை உருவாக்குகிறது. அதனால் எம்.எல்.ஏ.க்களை கூப்பிட்டு நீங்கள் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று ஆலோசகர்களும் அமைச்சர்களும் ஒருமித்த குரலில் சொல்லியிருக் கிறார்கள்.

ஏற்கனவே உளவுத்துறையும் இந்த யோசனையை முதல்வர் விஜய்யிடம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் தான், துணை சபாநாயகர் விவகாரம், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் உள்ளிட்ட விசயங்கள் அதிச்சியை ஏற்படுத்தியதால் உடனே எம்.எல்.ஏ.க்களிடம் பேச ஏற்பாடு செய்யுங்கள் என்று புஸ்சி ஆனந்திற்கு விஜய் உத்தரவிட்ட நிலையில், இந்த சந்திப்பிற்கு திட்டமிடப்பட்டது என்கிறார்கள் ஆலோசகர்களுக்கு நெருக்கமானவர்கள்.

எம்.எல்.ஏ.க்கள் சந்திப்புக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஆசைகளுக்கு நீங்கள் விலை போய்விடக்கூடாது. உங்களுக்கு என்ன தேவையோ அதனை அமைச்சர்கள் கவனித்துக் கொள்வார்கள். அரசு அதிகாரத்தை நீங்கள் கையில் எடுக்கக்கூடாது. ஆட்சிக்கும் எனக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத் தாதீர்கள். அதேபோல, குற்ற வழக்குகள் பதிவு செய்கிற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கை எடுப்பேன். இது தான் கடைசி எச்சரிக்கை என்று சொல்ல விஜய் தயாராகியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களைத் தொடர்ந்து தவெக மா.செ. க்களையும் அழைத்து எச்சரிக்கை செய்யும் முடிவில் இருக்கிறாராம் முதல்வர் விஜய். அதற்கு தனியாக ஒரு நாள் ஏற்பாடு செய்யவும் புஸ்சி ஆன்ந்திற்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+