ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையில்.. 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் அருகே ஐ போன் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் கிராமத்தில் ஐ போன் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தத் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்து வந்தனர்.

iPhone Minister Keerthana TVK

இதனைத் தொடர்ந்து அந்தத் தொழிற்சாலையில் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வந்தது. தீபாவளி பண்டிகைக்கு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, அதேபோல் திங்கள்கிழமை தமிழக அரசு விடுமுறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் திங்கள்கிழமை அந்த தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 3 தொழிலாளர்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விழுந்து 3 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த மற்ற தொழிலாளற்கள் தொட்டியில் விழுந்த 3 தொழிலாளர்களை காப்பாற்றி ஒசூர் காவேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவேரி மருத்தவமனை மருத்துவர்கள் 3 பேரையும் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கெனவே 3 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பேல்ராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த சாரதிகுமார்(25), அதே மாவட்டச் சேர்ந்த அனுமந்தபுரம் ஊராட்சி ஜம்பூத் கிராமத்தைச் சேர்ந்த காவேரி(32), பாலக்கோடு தாலுக்கா தின்னூர் கிராமத்தைச் சேர்ந்த அக்மல் (28) ஆகிய 3 பேர் என தெரிய வந்தது.

காவேரி மருத்துவமனையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலென்ஸில் சடலத்தை ஏற்றும் போது மக்கள் அதிக அளவில் கூடிவிட்டனர். இதனால் ஒசூர் டி.எஸ்.பி சுதீஷ் தலைமையில் மாநகர காவல் ஆய்வாளர் பிரகாஷ், சிப்காட், அட்கோ போலீஸôர் கவேரி மருத்துவனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த 3 பேரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து ராயக்கோட்டை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+