சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது காதல் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களைப் பற்றி ஓபனாக பேசியது இப்போதுதான். குறிப்பாக தான் நம்பிய ஒரு உறவு கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சுய விருப்பங்களையும், அமைதியையும் எப்படி பாதித்தது என்பதை அவர் சொன்ன விதம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது பற்றி பலரும் பேசி வரும் நிலையில் ரேகா நாயர் அனுபமாவுக்கு நடந்தது ரொம்ப கொடுமையானது என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் ரேகா நாயர் பேசும்போது, அனுபமா ரொம்பவும் ஸ்ட்ராங்கானவங்க. அதனாலதான் 2 வருஷத்துக்குள்ள அந்த உறவில் இருந்து வெளியே வர முடிஞ்சிருக்கு. அவர் 18 வயசுல ஹீரோயினியாக அறிமுகமாகி இருக்கிறாங்க. குழந்தை நட்சத்திரமாக பல வருஷமாக சினிமாவில் இருந்திருக்காங்க. இதனால அவங்களுக்கு சினிமாவில் யார் எப்படி நடந்து கொள்வார்கள்? இந்த துறையில் என்ன மாதிரி மனிதர்கள் இருப்பார்கள் என்று நன்றாகவே தெரியும்.
நடிகை ரேகா நாயர் பேட்டி
ஆனால் காதல் என்று வரும்போது அனுபமா தன்னை முழுமையாக அந்த உறவுகள் கொடுத்து விட்டார். அம்மா அப்பாவிடம் கிடைக்காத அன்பு இந்த உறவில் கிடைத்தது அதனால் கெட்டியாக பிடித்துக் கொண்டேன் என்று நினைத்தேன் என்று அவரே அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். ஒருவரிடம் நாம் மிகவும் எதிர்பார்க்கும் அன்பு கிடைக்கும் போது அவர் சொல்வதை எல்லாம் சரி என்று நம்ப ஆரம்பித்து விடுகிறது நமது மனது, அது ஆபத்தானது என்பதற்கு அனுபமாவின் வாழ்க்கையும் ஒரு பாடம்.
எனக்கே தெரியாமல் அவர் என்னை மாற்றிவிட்டார் என்று அனுபமா சொல்லி இருக்கிறார். அந்த நபருக்கு சுடிதார் பிடிக்கிறது என்றதும் சுடிதார் வாங்க தொடங்கிவிட்டேன். அதுபோல ஸ்லீவ்லஸ் உடை பிடிக்காது என்பதால் அதையும் போடாமல் தவிர்த்து வந்தேன். இப்படி அவருடைய விருப்பங்களுக்கு ஏற்ப என்னை நானே மாற்றிக் கொண்டேன் என்று அனுபவமா சொல்லி இருக்கிறார். இதுதான் பலரும் செய்வது. ஆனால் ஒரு கட்டத்தில் அடுத்தவர்களுக்காக தன்னுடைய விருப்பங்கள் எல்லாவற்றையும் இழந்து, இனி என்ன செய்யப் போகிறோம் என்ற ஒரு நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். அது மரத்தின் கிளைகள் ஒவ்வொன்றாக இழப்பது போலத்தான். வெளியில் இருந்து பார்த்தவர்களுக்கு எளிமையாக தெரிந்ததை, கடந்து வந்தவர்களுக்கு தான் அதன் கஷ்டங்கள் தெரியும். அனுபமாவிற்கு நடந்தது கொடுமையான விஷயம் என்று அந்த பேட்டியில் ரேகா நாயர் பேசியிருக்கிறார். ஏற்கனவே அனுபமா பேசும்போது நான் இதற்கு முன்பு காதலித்த நபர் ஒருநாள் ரெமோ போல காதலைக் கொட்டுவார், அடுத்த நாள் அந்நியன் போல நடந்து கொள்வார். எதற்காக இப்படி நடந்து கொள்கிறார் என்று நமக்கே தெரியாது, அந்த அளவிற்கு கடுமையாக நடந்து கொள்வார். பிறகு அடுத்த நாள் வந்து எதுவும் நடக்காதது போல வந்து பேசுவார். நமக்கு அவருடைய மனநிலையை புரிந்து கொள்ளவே முடியாது. அதுபோல நான் காதலிக்கும் விஷயத்தை அந்த நபர் அவருடைய வீட்டில் உடனே சொல்லி விட்டார். உடனே அவருடைய குடும்பத்தினர் என் குடும்பத்தை வந்து பார்த்தார்கள். என் குடும்பத்தினர் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தார்கள். அடுத்ததாக எப்போது கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்ற பேச்சு வரைக்கும் வந்துவிட்டது. அது எனக்கு பயத்தை கொடுத்தது. அப்போது நான் தான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம், என்கேஜ்மென்ட் வேண்டாம், உன்னுடைய வேலையில் நீ கவனம் செலுத்தி என்னுடைய வேலையில் நான் கவனம் செலுத்துகிறேன் என்று தள்ளி வைத்துக் கொண்டே வந்தேன். ஆனால் நான் அவருடைய பணத்திற்கு ஆசைப்பட்டேன் என்று சொல்லிவிட்டார்கள் என்று கூட அனுபமா சொல்லி இருந்தார்.அனுபமாவின் பேட்டி
அனுபமா முன்னாள் காதலர்
ரசிகர்கள் கருத்து