பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
பாவியர் சபைதனிலே - புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் தவப்பயனை
ஆவியில் இனியவளை - உயிர்த்த
தணிசுமந் துலவிடு செய்யமு தை,
ஓவியம் நிகர்த்தவளை - அரு
ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத்
தேவியை, நிலத்திருவை - எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத்தை (39)
படிமிசை இசையுற வே - நடை
பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக்
கடிகமழ் மின்னுரு வை - ஒரு
கமனியக் கனவினைக் காதலினை,
வடிவுறு பேரழ கை - இன்ப
வளத்தினைச் சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக் களத் தில் - அறக்
கோமகன் வைத்திடல் குறித்து விட்டான். (40)
(அடுத்தது துகிலுரிதற் சருக்கம்)












Click it and Unblock the Notifications