பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
வேள்விப் பொருளினை யே - புலை நாயின் முன்
மென்றிட வைப்பவர் போல்
நீள்விட்டப் பொன்மாளி கை - கட்டிப் பேயினை
ஆள்விற்றுப் பொன்வாங்கி யே - செய்த பூணை யோர்
ஆந்தைக்குப் பூட்டுதல் போல்,
கேள்விக் கொருவரில்லை - உயிர்த் தேவியைக்
கீழ்மக்கட் காளாக்கி னான். (41)
செருப்புக்குத் தோல்வேண்டி யே - இங்குக் சொல்வாரோ
செல்வக் குழந்தையினை?
விருப்புற்ற சூதினுக் கே - ஒத்த பந்தயம்
மெய்த் தவப் பாஞ்சாலி யோ?
ஒருப்பட்டுப் போன வுடன் - கெட்ட மாமனும்
உன்னியத் தாயங்கொண் டே
இருப்பகடை போடென்றான் , பொய்மைக் காய்களும்
இருப்பகடை போட்டவே. (42)
(அடுத்தது துகிலுரிதற் சருக்கம்)












Click it and Unblock the Notifications