பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

பிழைத்த தென்னந்தோப்பு

வயலிடை யினிலே - செழுநீர், மடுக் கரையினிலே,
அய லெவருமில்லை -தனியே ஆறுதல் கொள்ள வைத்தேன், (1)

காற்றடித் ததிலே - மரங்கள், கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே - சிதறி, நாடெங்கும் வீழ்ந்தனவே. (2)

சிறிய திட்டையிலே - உளதோர், தென்னஞ் சிறுதோப்பு
வறிய வனுடைமை - அதனை வாயு பொடிக்க வில்லை. (3)

வீழ்ந்தன சிலவாம் - மரங்கள், மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே அதனைவாயு பொறுத்து விட்டான். (4)

தனிமை கண்டதுண்டு - அதிலே சார மிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில், அது தேம். பாகுமதுர மன்றோ. (5)

இரவி நின்றதுகாண் - விண்ணிலே, இன்ப வொளித்திரளாய்
பரவி யெங்கணுமே -கதிர்கள் பாடிக் களித்தனவே. (6)

நின்ற மரத்திடையே - சிறிதோர் நிழலினில் இருந்தேன்;
என்றும் கவிதையிலே - நிலையாம், இன்பம் அறிந்து கொண்டேன். (7)

வாழக் பராசக்தி! - நினையே வாழ்த்திடுவார் வாழ்வார் ;
வாழ்க பராசக்தி -இதையென், வாக்கு மறவாதே! (8)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+