ஆர்ட் கால-ரி
வானவில் தான் மனிதனுக்கு முதல் ஓவியம். ஆதிகால மனிதனுக்கு இந்த வர்ணஜாலம்மகிழ்ச்சியைத் கொடுத்தது.
அடுத்தடுத்து இயற்கையின் வண்ண அழகு செயற்கைக்கு வந்தபோது அதுவும் கூடமகிழ்ச்சிதான். ஒரே மாதியான இந்த அழகு ஓவியங்களைப் பார்த்து போர் அடித்துப்போகமல் இருக்க, மாடர்ன் ஆர்ட் கலை உருவானது.
இதை அடிப்படையாகக் கொண்டு, வானவில் 2000 என்ற ஓவியக் கண்காட்சிகோவையில் நடந்தது. 3 நாள் நடந்த இக் கண்காட்சிக்கு சித்ர கலா அகாடமி ஏற்பாடுசெய்திருந்தது.
இதில் இடம் பெற்றிருந்த ஓவியங்கள் பல கண்காட்சியிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்தக்கண்காட்சியில், ஜீவா என்பவரின் ஓவியங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
அன்னையின் பிரார்த்தனை என்ற தலைப்பில் இடம் பெற்ற மதர் தெரசாவின் ஓவியம்அருமையாக இருந்தது. உலக மக்களின் நல வாழ்வுக்கு தினமும் பிரார்த்தனை செய்துவந்த அன்னையின் பிரார்த்தனை எப்படி இருக்கும் என்பதை ஓவியம் விளக்குகிறது.கருப்பு வெள்ளையில் இருந்தாலும், உணர்வுப் பூர்வமான இந்த ஓவியம், சற்றுவித்தியாசமானது தான்.
"கிளப் பேச்சுக் கேட்கவா என்ற வர்ணமயமான ஓவியத்தில் வண்ணங்களின் கலவைதான் அதிகம். திட்டுத் திட்டாக வண்ணங்களை பரப்பி, பிளேடினால் கீறி கோடுகளைஉண்டாக்கி உருவம் காட்டப்பட்டு உருவாக்கப்பட்டது தான் இந்த ஓவியம். கிளிக்கும்பெண்களுக்கும் என்னத் தொடர்பு?. இந்த கிளியின் பேச்சு ஒருவேளை காதலனின்தூதாக இருக்குமோ? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். "கிளிப் பேச்சு சரியானபிளேடு ஓவியம் தான்.
மலையோரக் கிராமம் ஒன்றின் சூழலை சித்தரிக்கிறது இன்னொரு ஓவியம். இதுவும்ஜீவாவின் கைவரிசைதான். மலையில் கிடைக்கும் மூங்கில்களில் கூடை முடையும்பெண்ணின் வாழ்க்கையை விளக்குகிறது இந்த ஓவியம்.
கோவை சித்ர கலா அகாடமியின் தலைவராக உள்ள ஜீவாவின் ஓவியங்கள் பல்வேறுகண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன.
கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு சிலை வைத்தபோது, நடந்த ஓவியக் கண்காட்சியில்133 ஓவியர்கள் தேர்வு பெற்றனர். இவர்களில் ஜீவாவும் ஒருவர்.
ஓவியங்கள் ஜீவாவிற்கு கைவந்த கலை. ஒரு உருவத்தையோ, மனிதர்களையோ,மலர்களையோ சில நிமிடங்களில் வரைந்து அசத்தக் கூடியவர். கண்காட்சிக்குவந்திருந்த ஒரு சிலரை அந்த இடத்திலேயே வரைந்து காண்பித்துஅமர்க்களப்படுத்தினார்.
வண்ணங்களில் ஜாலம் செய்வது பெரிதல்ல. பார்க்கும் விழிகளைக் கவர வேண்டும்.அதை ஜீவா செய்துள்ளார்.
வெல்டன் ஜீவா!
ஆர்ட் காலரியை அலங்கரித்த முந்தைய கட்டுரைகள்:
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications