For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஆகஸ்டு 11, 2001

Subramaniya Bharathi

கண்ணன் என் காந்தன்

ராகம்: வராளி
தாளம்: ஏக தாளம்
சிருங்கார ரசம்
கனிகள் கொண்டுதரும் - கண்ணன்
கற்கண்டு போலினிதாய்,
பனிசெய் சந்தனமும் - பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வான்முகத்தான் - கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே - வண்ணம்
இயன்ற சவ்வாதும். (1)


கொண்டை முடிப்பதற்கே: - மனங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே - கண்ணன்
மையுங் கொண்டு தரும்:
தண்டைப் பதங்களுக்கே - செம்மை
சார்ந்து செம்பஞ்சு தரும்:
பெண்டிர் தம்க்கெல்லாம் - கண்ணன்
பேசருந் தெய்யவமடீ! (2)


குங்குமங் கொண்டுவரும்- கண்ணன்
குழைத்து மார்பெழத:
சங்கையி லாதபணம் - தந்தே
தழுவி மையல் செய்யும்:
பங்கமொன் றில்லாமல் - முகம்
பார்த்திருந் தாற்போதும்:
மங்கள மாகுமடீ! - பின்னோர்
வருத்த மில்லையடீ!

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X