பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி 21, 2001

Subramaniya Bharathi

தேசிய கீதங்கள்

தாயின் மணிக்கொடி

பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்

(தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு)

பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

சரணங்கள்

1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்

உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே

பாங்கின் எழுதித் திகழும் - செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)


2.பட்டுத் துகிலென லாமோ? - அதில்

பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று

மட்டு மிருந்தடித் தாலும் -அதை

மதியாததால் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்)


3.இந்திரன் வச்சிரம் ஓர்பால் -அதில்

எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் (தாய்)

மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்

மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)


4.கம்பத்தின் கீழ்நிற்றல காணீர் - எங்கும்

கரணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்

நம்பற் குரியர் அவ்வீரர் - தங்கள்

நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார் ( தாயின்)


5.அணியணி யாயவர் நிற்கும் - இந்த

ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?

பணிகள் பொருந்திய மார்பும் - விறல்

பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)


6.செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்

தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர்,

சிந்தை துணிந்த தெலுங்கர் -தாயின்

சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)


7.கன்னடர் ஒட்டியரோடு - போரில்

காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்

பொன்னகர்த் தேவர்க ளொப்ப -நிற்கும்

பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர்.


8.பூதலம் முற்றிடும் வரையும் - அறப்

போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,

மாதர்கள் கற்புள்ள வரையும் -பாரில்

மறைவரும் கீர்த்திகொள் ராஜபுத்ர வீரர்,


9.பஞ்த நதத்துப் பிறந்தோர் - முன்னைப்

பார்த்த் முதற்பலர் வாழ்ந்த நன் னாட்டார்,

துஞ்சும் பொழிதினும் தாயின் - பதத்

தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்,


10. சேர்ந்ததைக் காப்பது காணீர்! - அவர்

சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!

தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்

தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+