பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 22, 2001
சர்வ மத சமரசம்
(தொடர்ச்சி)
தேய்வென்ற மரணத்தை தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக்கே டேன் கூறாய் என்றேன்.
வானவனாம் கோவிந்த சாமி சொல்வான் :
அந்தமிலா மகாதேவன் கயிலை வேந்தன்
அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்:
பந்தமில்லை, பந்தமில்லை: பந்தம் இல்லை:
பயமில்லை, பயமில்லை: பயமே இல்லை: (59)
அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்:
அதுவென்றால் எதுவெனநான் அறையக் கேளாய்!
அதுவென்றால் முன்னிற்கும் பொருளின் நாமம்:
அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்: நீயும்
அதுவன்றிப் பிறிதில்லை: ஆதலாலே
அவனியின்மூ தெதுவரினும் அசைவு றாமல்
மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை
மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய் சீடா! (60)
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications