உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா
"கிறிஸ்துமஸ்" என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பதும், கிறிஸ்தவ மதத்தார்முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத்துவங்கியது ரோமாபுரி நாட்டில் கிறிஸ்து மரித்த பிறகு 336ம் ஆண்டில்தான் என்பது பெரும்பாலானவரலாற்று ஆய்வாளர்களின் முடிவு.
1994ம் ஆண்டு பிரிட்டானிகா புத்தக தகவல் களஞ்சியம் வெளிப்படுத்தும் குறிப்பொன்றில் 5.5 பில்லியன் உலக மக்கட் தொகையில் 1.8 பில்லியன்கிறிஸ்தவ மக்கள் உலகளவில் வசிப்பதாகவும் அறிவிக்கின்றது. அமெரிக்காவில் வசிக்கும் 281 மில்லியன் மக்கட் தொகையில் 241 மில்லியன்மக்கள் அதாவது 85 சதவிகிதம் மக்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் கிறிஸ்து பிறப்பை மிகவும் விசேடமாகக் கொண்டாடுகின்றார்கள்.
கிறிஸ்து பிறப்பறிவிப்பு விழாவை எட்டாம் நூற்றாண்டிலிருந்து கிழக்கிந்திய சபையும் பதினோராம் நூற்றாண்டிலிருந்து மேற்கிந்திய சபையும் கொண்டாடத்துவங்கினர். ஆனால் முதன்முதலில் இந்த விழாவைக் கொண்டாடிய நாடு இங்கிலாந்து தான்! யேசு பிறந்த பெத்லேகமில் மற்றும் உலக நாடுகளில் யேசுபிறப்பை 14ம் நூற்றாண்டில்தான் கொண்டாடத் துவங்கினர் என்பதும் வரலாறு சுட்டிக்காட்டும் உண்மைகள்!
கிறிஸ்துமஸ் இப்படித்தான்.....
உச்சந்தலையிலிருந்து உள்ளங்காலுக்கு ஊடுருவும் உச்சக் குளிர்காலத்தில்தான் ரோம், ஐரோப்பா, ஸ்காண்டினேவியா மக்கள் புத்தாடையுடுத்தி ஆடம்பரமானமிகப்பெரிய விருந்துகளும் கேளிக்கைகள் என்றும் தங்களைச் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களாக மாற்றிக்கொள்வார்கள். குளிருக்குப் பயந்துவீட்டுக்குள் முடங்கிக்கொள்ளாமலிருக்கவே இத்தகைய ஆடம்பரமான நிகழ்வுகளில் தங்கள் கவனத்தை மாற்றிக்கொண்டனர்! இவையெல்லாம் யேசுபிறப்புக்கு முன்பிருந்தே வழக்கமாகக் கொண்டிருந்த பழக்கமாகும்! குளிர்காலத்தின் இறப்பைச் சிறப்பிப்பதோடு எதிர்வரும் வசந்தகாலத்தை வரவேற்கத்தயாராகின்ற எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும், மதுவோடும் மாமிசத்தோடும் இந்த நாட்கள் அமர்க்களப்பட்டிருந்தது என்றால் அது மிகையல்ல! இந்தநாட்கள்தான் கிறிஸ்துமஸ் முகிழ்க்கக் காரணமானது!
பைபிளில் எந்த இடத்திலும் யேசு கிறிஸ்து பிறந்த தேதியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாததும், "பாவப்பட்ட மக்களை மீட்டெடுக்க இறைவனின்திருமகன் வசந்தகாலம் தோன்றும்போது இந்த மண்ணுலகில் மகனாகப் பிறப்பார்," என்ற வேத வசனங்கள் சற்றுக் குழப்பத்தைத் தந்தாலும், "நடுக்கும்குளிரில் எங்கும் தங்க இடம் கிடைக்காமல் சூசையும் மரியாளும் ஊரின் ஒதுக்குப்புறமாகவிருந்த டுமாடு அடைக்கும் கொட்டில் பக்கம் தங்க நேரிட்டது..."என்ற வேத வசனங்கள் அலசி ஆராயப்பட்டு நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத் தேவாலயங்கள் ஒன்றுகூடி இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகிறவிழாவாக இந்த நாட்களை மாற்றிவிட முடிவு செய்து அறிவித்தன!
முதன் முதலில் கிறிஸ்துமஸ் சனவரி 6ம் தேதி கொண்டாடப்பட்டதாக பழைய ஜூலியன் நாட்காட்டி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. உரோமாபுரி நாட்டின்அதிகாரப்பூர்வமான விடுமுறை தினமாகவும் அ.ஈ.534 ( Anno Domini என்றால் In the year of the lord )லிருந்துஅனுசரிக்கப்பட்டதாகவும் பின்னர் கிரகோரியன் நாட்காட்டிப்படி 1743லிருந்து டிசம்பர் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டதாகவும் வரலாற்றுக்குறிப்புக்கள் அதிர்ந்து அறிவிக்கின்றது! இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் அன்றைய போப்பாண்டவர் ஜூலியஸ் ஐ வார்.இந்த நாள் ஏற்கனவே கிறிஸ்தவர்களில் அப்போதைய பெரும்பிரிவினரான பாகான் இனத்தவர்கள் கொண்டாடிய "சேட்டர்நேலியா"திருவிழா கொண்டாடப்பட்ட நாளாகும்.
இந்த கிறிஸ்துமஸ் விழா மெல்லமெல்ல கிறிஸ்தவ சமுதாயம் வசிக்கின்ற பகுதிகளில் உலகெங்கும் பரவியது. 432ல் எகிப்திற்கும்அங்கிருந்து இங்கிலாந்திற்கு 6ம் நூற்க்ஷீாண்டின் இறுதியிலும் எட்டாவது நூற்றாண்டின் இறுதியில் ஸ்காண்டினேவியா தீபகற்பம்வரையிலும் பரவியது. 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் எழுந்த மத மறுமலர்ச்சி, கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத்துவங்கினர். ஆனால் 1645ல் லிவர் கிராம்வெல் மற்றும் அவருடைய புரிடான் படைகளும் இங்கிலாந்தைக் கைப்பற்றியபோதுகிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தடைவிதித்தது. ஆனால் இரண்டாம் சார்லஸ் ஆட்சியைக் கைப்பற்றியபோது மீண்டும் கிறிஸ்துமஸ்விழாவை குதூகலமாகக் கொண்டாட உத்திரவிட கிறிஸ்துமஸ் விழா பிரசித்தி பெற்றது!
கிறிஸ்துமஸ் அமெரிக்காவைச் சற்றுத் தாமதமாகத்தான் வந்தடைந்தது. 1659 லிருந்து 1681வரை கிறிஸ்துமஸ் கொண்டாடுவது சட்டப்படிகுற்றமாக அறிவிக்கபட்டு தடை செய்யப்பட்டிருந்தது! பாஸ்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.அதன் விளைவு ஆங்கிலேய நடைமுறையான கிறிஸ்துமஸைக் கொண்டாட முற்படாததுடன் அமெரிக்கர்களுக்கு எதிரான கிறிஸ்துமஸ்என்ற முத்திரை குத்தப்பட்டது.
இருந்தபோதும் சில இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட விதிவிலக்கு தரப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் குடியேறிய காலனிகளிலும்ஜேம்ஸ் டவுன் போன்ற இடங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.
19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்காவில் கோலாகலமாகக் கொண்டாட கிறிஸ்துமஸ் திருவிழா தேவை என்ற அமெரிக்கர்கள்ஒருமனதாகக் குரல் எழுப்ப கிறிஸ்துமஸ் நாள் தேசிய விடுமுறையோடு கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை 1870ம் ஆண்டு சூன் 26ம்தேதி அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களை விருந்தும் கேளிக்கையும் குடும்பங்கள் கூடும் ஒருஅரிய விழாவாக மாற்றம்செய்துகொண்டனர். அடுத்த நூறு ஆண்டுகளில் அமெரிக்கர்கள் கிறிஸ்துமஸ் என்றால் இப்படித்தான் என்றபாரம்பரியத்தை வெகு நேர்த்தியாக உருவாக்கிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். கிறிஸ்மஸ் மரம் அலங்கரித்தல், வாழ்த்தட்டைகள்அனுப்புதல், பரிசுகள் கொடுத்தல், கிறிஸ்மஸ் தாத்தா (சாண்ட்ட கிளாஸ் ) என்று பல பரிமாணங்களை ஏற்படுத்தி தனி கலாச்சாரமுத்திரையை பதித்துக்கொண்டனர். அதுவே இன்றளவும் தொடர்கின்றது.
கிறிஸ்மஸ் மரம்:
உலகில் இன்றைக்கு "கிறிஸ்துமஸ்" பெருவிழாவைக் கொண்டாடுகிறவர்கள் "கிறிஸ்மஸ் மரம்" இல்லாமல் கொண்டாடுவதில்லை என்கிறஅளவுக்கு ஒரு முக்கியத்துவம் பெற்றுவிட்டதை நாமறிவோம். கிறிஸ்தவர்களிடையே எப்படி இந்தப் பழக்கம் உருவானது? இந்தப் பழக்கம்எப்போதிருந்து வழக்கமானது? நல்லதோ கெட்டதோ நமது அப்பம்மாக்களுக்கு அவர்களது அப்பப்பாக்கள், அம்மம்மாக்கள்வழிவழியாக விட்டுச்சென்ற பழக்கத்தை கெட்டியாக பிடித்துக் கொள்கிறோம். கால மாற்றத்திற்கு ஏற்ப சிறுசிறு மாற்றங்களோடு அத்தகையநினைவுகளைப் புதுப்பித்துக் கொள்கிறோம். பழையன கழிதலும், புதியன புகுதலும்இதன்பாற்பட்டதுதானோ!
நதிமூலம்...
வரலாறுகளில் நாம் பின்னோக்கி வழுக்கியபோது, சிக்கிய தடயங்களை, இயந்திரகதியாய் இயங்கும் இன்றைய இளம்தலைமுறையினருக்குச் சொல்லி வைக்கலாமே என்ற எண்ணம் எழுந்ததன் விளைவுதான் இங்கே..இந்தக் "கிறிஸ்மஸ் மரம்" முளைவிடக்காரணமாகிப் போனது.
"கிறிஸ்மஸ் மரம்" ஐரோப்பிய நாடுகளிலிருந்து வேர்விட்டு முளைத்துத் தழைத்துச் செழித்து இன்று உலகெங்கும் விருட்சமாக படர்ந்துள்ளது.நதிமூலம் பார்க்கிறபோது நம்மை 11ம் நூற்க்ஷீாண்டின் பிற்பகுதிக்கு இட்டுச் செல்கிறது. மக்கள் மனம் மகிழ கனிவகைகளை,எதிர்பார்ப்பின்றி அள்ளித் தருகிற மரங்களுக்கு நன்றிகூறும் நற்பண்பில் ரோமானியர்களும் இங்கிலாந்தினரும் திளைத்திருந்திருக்கின்றனர்.கிறிஸ்து பிறந்த மாதமான டிசம்பர் மாத முதல் வாரத்தில் மரங்களை சிவப்பு ஆப்பிள்களால் அலங்கரித்து ஆராதித்திருக்கின்றனர்.
15ம் நூற்றாண்டில்தான் வீடுகளில் மரங்களை வைத்து மகிழ்ந்து கொண்டாடியிருக்கின்றனர். தாம் -ஏவாள் தினமாக டிசம்பர் 24ம் தேதியைக்நிர்ணயித்து, மனித சந்ததி உருவாககாரணமாயிருந்த "கனி" மரத்தினை வீடுகளில் வைத்தனர். மரங்களை குட்டை, குட்டையாக வெட்டிஎடுத்து வீடுகளில் வைத்து அலங்கரித்து ஆனந்தப்பட்டிருக்கின்றனர்.
முதல் மரம்.....
"கிழக்கு பிரான்சு நாட்டில் மேற்கு ஜெர்மனியின் எல்லைக்கோட்டை ஒட்டி அமைந்துள்ள அல்சாஸில் முதல் "கிறிஸ்மஸ் மரம்" வீட்டில்வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பிரான்சு தேசம் முழுவதும் வீடுகளில் வைக்கும் பழக்கம் ஏற்பட தொடர்ந்து ஜெர்மனி, ரோம், நார்வே,ஸ்திரியா என அவ் வழக்கம் ஆலவிழுதுகளாய் கால் பரப்பியிருக்கிறது.
அது சரி. மரம் எப்படி கிறிஸ்மஸ் விழாவின் பிரிக்கமுடியாத அங்கமானது? அதைக் கடைசிவரை சொல்லாமல் சஸ்பென்ஸா கொண்டுபோறேனேன்னு பாக்குறீங்களா? இதோ உங்கள் ஆவல் பூர்த்தியாகும் நேரம் வந்துவிட்டது!
ஜெர்மானிய கத்தோலிக்க கிறிஸ்தவ போதகரான புனிதர் குணா.போனிஃபேஸ் என்பார்தான் இதற்கு மூல காரணமாகக் கருதப்படுகிறார்.ஜெர்மானிய பாகான் இனத்தவர்கள் தங்கள் தேவைகளுக்காக ஓக் மரங்களை வெட்டி அழித்து வந்தனர். மின்சாரம் இல்லாத அந்நாட்களில்குளிரை விரட்ட ஓக் உருட்டுக் கட்டைகள்தான் வீடுகளில் பயன்படுத்திவந்தனர். குடும்பங்களை வெதுவெதுப்பாக, கதகதப்பாகவைத்திருப்பதில் மையப்பொருளாக ஓக் திகழ்ந்தது. இப்படியே மரங்கள் வெட்டி அழிக்கப்படுமானால் எதிர்கால சந்ததியினருக்குமரங்களின் முகவரியே தெரியாமல் போய்விடும். எனவே ஒரு ஓக் மரம் வெட்டப்பட்டால் அந்த இடத்தில் மூன்றாம் நாளே ஒரு மரக்கன்று துளிர் விட வேண்டும். எப்படி, மரித்த மூன்றாம் நாள் கிறிஸ்து உயிர்த்து எழுந்தாரோ அதைப் பிரதிபலிக்க வேண்டும், என்று புனிதர்போனிஃபேஸ் வேண்டுகோள் விடுத்தார். அதன் பிறகு ஜெர்மானியர்கள் ஒரு ஓக் மரம் வெட்டினால் ஒரு ஓக் மரம் அல்லது ஒரு ஃபிர்மரத்தை நட்டு உயிர்ப்பித்தனர்.
கிறிஸ்துவின் நினைவாக இதனைச் செய்யத் தலைப்பட்ட ஜெர்மானிய பாகான் இனத்தவர்கள், கிறிஸ்து பிறக்கிற மாதங்களில் தங்கள்இல்லங்களில் ஓக் மரங்களையோ ஃபிர் மரங்களையோ அலங்கரித்து வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர். இந்தப் பழக்கம்மெல்லமெல்ல ஐரோப்பா நாடுகளில் பரவியதோடு ஜெர்மானியர்கள் அமெரிக்காவில் குடியேறியபோது அமெரிக்காவிலும் பரவி,அன்றும், இன்றும், என்றும் என கிறிஸ்மஸ்ஸும் கிறிஸ்மஸ் மரமும் பிரிக்க இயலாத அளவுக்கு கிவிட்டது.
மார்ட்டின் லூதர்...
இன்னொரு ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல் ஒன்றும் உள்ளது. கிறிஸ்தவ மதத்தின் கோட்பாடுகளில் முரண்பட்டுப் புரட்சிசெய்துபுரட்டெஸ்ட்டண்ட்டிஸத்தை நிறுவிய தளகர்த்தரான மார்ட்டின் லூதர் இவ்வழக்கத்திற்கு காரணவாதி என்பாரும் உண்டு.
மரங்களடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு இரவு மார்ட்டின் லூத்தர் நடந்து போய்க்கொண்டிருந்தார். அந்தக் காட்டு வெளியிடையில் கண்டகாட்சி அவரை மெய் மறக்கச் செய்தது. அந்த அற்புத வனத்தில் இருளைக் கிழித்துக் கொண்டு வானத்து நட்சத்திரங்கள் இடம் பெயர்ந்துமரக்கிளைகளில் வந்தமர்ந்தது போன்ற ரம்மியமான காட்சியைக் கண்டார். தென்றல் காற்றின் தாலாட்டலில் அசைந்தாடும் இலைகளைஊடுருவி மின்மினிப் பூச்சிகளைப்போல் சஞ்சரிக்கிற நட்சத்திரங்கள் தருகிற உணர்வில் சொக்கிப் போனாராம் மார்ட்டின் லூத்ர்.
சோகங்களைக்கூடச் சோரம் போக வைத்து, சிந்தனையில் தெளிவினைச் சேர்க்கும் சக்தி பீரிட்டெழுவதை மன வானில் கண்ட மார்ட்டின்லூதர் மனதிற்குள் ஒரு யோசனையும் பூத்தது. வானத்து நட்சத்திரங்கள் வனத்துக்கு மட்டுமா சொந்தம்? என்வீட்டுக்கும் சொந்தமே என்கிறஅவரின் நினைவுகள் நிச்சயித்தது ஒன்றை; என்றும் பசுமையான ஒரு சிறிய மரத்தை அவரே வெட்டினார்.
வீட்டிற்கு எடுத்துச் சென்றார்; காட்டில் கண்டதை வீட்டில் பார்க்க ஆசை; அவருடைய கரங்கள் அந்த மரத்துக்கு அழகுசேர்த்தது;ஒளியுமிழும் மெழுகுவர்த்தி விளக்குகள் கொண்டு அதன் கிளைகளுக்கு வெளிச்ச உயிர் கொடுத்தார்; வனம் போன்ற வனப்பு அங்கேமிளிர்ந்தது. அந்த இனிய நாள் "கிறிஸ்மஸ்" கொண்டாட்டங்களில் இல்லங்கள் எல்லாம் முகிழ்த்திருந்த நன்னாள்! அடுத்தடுத்த "கிறிஸ்மஸ்"கொண்டாட்டங்களில் மரங்கள் விதவிதமான அலங்கரிப்புகளோடு முக்கியத்துவம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
கிறிஸ்மஸ் தாத்தா...
குட்டையான, குண்டான உருவம், குழாய் புகைப்பான், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட் உடை,சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான்கிறிஸ்துமஸ் தாத்தா....ஸாண்ட்ட கிளாஸ்!
17ம் நூற்றாண்டில் நியூயார்க்கில் குடியேறிய டட்ச் இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸ் என்று அறிமுகப்படுத்தியவர் பின்னாளில் சாண்ட்டகிளாசாக வலம் வரத் துவங்கினார். டச்சு இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸை அறிமுகப்படுத்தியபோது புனித நிக்கோலஸ் பிஷப்பாகஇருந்தபோது அவர் அணிந்த சிவப்பு அங்கி போன்ற ஆடையையும் அவர் பயன்படுத்திய வெள்ளைக் குதிரையையும் அறிமுகம்செய்தனர். அதுவே சில மாற்றங்களுடன் பின்னர் சாண்ட்ட கிளாஸ் ஆடைகளாக மாறின.
நிக்கோலஸ் வரும் இரவு, குழந்தைகள் ஒரு சிறு புல் கட்டு அல்லது வைக்கோல் கட்டு ஒன்றை அவரது குதிரைக்காகவும் அவர்களுடையகாலணிகளை வீட்டின் நுழைவு வாயிலுக்கு வெளியே வைத்துவிடுவார்கள். (இப்போதெல்லாம் தங்கள் பரிசுப் பொருட்களை சாண்ட்டாவிட்டுச் செல்ல கிறிஸ்மஸ் மரத்தில் பெரிய காலுறைகளை தொங்கவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்! )
காலையில் எழுந்து பார்க்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வைத்திருந்த புற்கட்டு மாயமாய் மறைந்திருப்பதையும் அவர்கள் காலணியில்இனிப்புகள், உண்ணும் பருப்பு வகைகள், பரிசுகள் என்றிருப்பதைக் காண்பார்கள். இரவு நிக்கோலஸ் வைத்துவிட்டுச் சென்றதாககுழந்தைகள் நம்பி மகிழ்வது வழக்கம். நள்ளிரவில் வைக்கோலை அகற்றி அனைத்தையும் அவர்களின் பெற்றோர்கள் வைப்பது மட்டும்பரம ரகசியமாகவே இருக்கும்!
ஜெர்மனியில் புனிதநிக்கோலஸ் ஒரு உதவியாளரோடு பரிசுப்பொருட்களை ஒரு கோணிப்பையில் எடுத்துச் சென்று குழந்தைகளுக்குவினியோகிக்கும் பழக்கம் இருந்திருக்கின்றது. நல்ல குழந்தைகளுக்கு புனித நிக்கோலஸ் பரிசுகள் கொடுப்பதும், பெற்றோர்களுக்குகீழ்படியாத குழந்தைகளுக்கு உடன் வரும் உதவியாளர் தன் கையில் வைத்திருக்கும் குச்சியால் மெல்லச் சில அடிகள் கொடுத்துஎச்சரிக்கையாக இருந்தால் அடுத்த ஆண்டு நிக்கோலசின் பரிசு கிடைக்கும் என்று சொல்வதும் வழக்கமாகயிருந்திருக்கின்றது.
அவர் மறைவுக்குப் பின் அவர் மேற்கொண்டிருந்த அப் பழக்கமே பின்னர் சாண்ட்ட கிளாஸ் என்ற உருவாகச் சித்தரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ்தினத்திற்கு முன்பு குழந்தைகளுக்கு பரிசுகளை அளிக்கும் வழக்கம் பின்பற்றப்படலாயிற்று.
குட்டையான தடித்த உருவம், நீண்ட வெண்தாடி, சிவப்பு வெல்வெட் வண்ண உடையின் ஓரங்களில் வெண்பகுதி அலங்கரிக்க, சர்க்கஸ்கோமாளி போன்ற சிவப்புவண்ணத்தில் குஞ்சம் வைத்த குல்லா, ஒரு மூக்குக்கண்ணாடி இடுப்பில் அகன்ற தோல் பட்டை பெல்ட், முதுகில்தொங்கும் பரிசுப் பொருட்கள் அடங்கிய ஒரு பெரிய பை....இதுதான் கிறிஸ்மஸ் தாத்தா! அது மட்டுமா? கிறிஸ்மஸ் தாத்தாவுக்குகடிதம்போட்டால் அவர் வாழ்த்து அனுப்புகின்றதிலிருந்து முக்கிய இடங்களுக்கு திடீர் விசிட் அடித்து குழந்தைகளைமகிழ்விக்கச்செய்வதுவரை உலகின் பல பகுதிகளில் கிறிஸ்மஸ் தாத்தா, சாண்ட்டகிளாஸாக பவனி வந்து கொண்டிருக்கின்றார்.
-ஆல்பர்ட்([email protected])
இவரது முந்தைய படைப்பு:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications