பாலஸ்தீனம்: அராபத்தின் மரணம் தரும் படிப்பினை
உலக மக்களில் பெரும்பாலானோரின் ஆதரவைப் பெற்ற விடுதலைப் போராட்டங்கள் என்பன உலகில் சிலவே. இரண்டாம்உலகப்போருக்குப் பின்னர் உலகில் ஆயிரக்கணக்கான இடங்களில் அவ்வப்பகுதி மக்கள் தமது விடுதலைக்கான போராட்டங்களைநடத்திவந்தபோதிலும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டமும்தான் உலகில் பரவலான மக்கள்ஆதரவைப் பெற்றவ. இவற்றிற்கு ஆதரவாகத்தான் உலகமெங்கும் பெருமளவில் மக்கள் இயக்கங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், இவற்றில் இனவெறியின் பிடியிலிருந்து விடுதலையான தென்னாப்பிரிக்கா இன்று கறுப்பர்களால்தான் ஆளப்படுகிறது.அவர்களால் தந்தை என்று போற்றப்படும் நெல்சன் மண்டேலாவின் காலத்திலேயே இவை நடந்தேறிவிட்டன. ஆனால்.... அராபத்...?!
நாடற்றவர்களாக்கப்பட்ட யூதர்களுக்கு ஒரு நாடு உருவாக்கும் முயற்சியில், உலகெங்கும் பரவியிருந்த யூதர்களின் ஒருங்கிணைந்ததிட்டத்தில் உருவாக்கப்பட்டதே இஸ்ரேல். ஆனால், கொடுமை என்னவென்றால், இதன்விளைவாக பாலஸ்தீனத்து மக்கள் நாடற்றவர்களாகஆக்கப்பட்டனர். தமது தாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கிய பாலஸ்தீன மக்களுக்கு உலகிலுள்ள பல்வேறு நாடுகளும்ஆதரவளித்தன. குறிப்பாக, அரபு நாடுகள் பெருமளவில் நிதியுதவி அளித்தன. பல்வேறு நாடுகளிலும் இவர்களுக்கு ஆயுதப்பயிற்சிகள்,ஆயுத உதவிகள் அளிக்கப்பட்டன.
இந்திராகாந்தியின் காலத்திலேயே இந்தியாவில் பாலஸ்தீன விடுதல இயக்கத்திற்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. அராபத்திற்கு விமானவசதிகள்கூட செய்கொடுக்கப்பட்டன. பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்பது தனி இயக்கமல்ல; பாலஸ்தீன விடுதலைக்காகப்போராடிவரும் பல்வேறு போராளிகள் இயக்கங்களின் ஒருங்கிணைப்பேயாகும். அதற்கும் அராபத்தே தலைமை தாங்கினார்.
இதன்பின்னர் ஒரு கட்டத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளினூடாகச் சிக்கல்களைத் தீர்ப்பது என்ற அடிப்படையில் சர்வதேச நாடுகளின்தலையீட்டின்பேரில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இராணுவரீதியிலான போராட்டத்திற்குத் தலைமைதாங்கியஅராபத்தே இதற்கும் தலைமை தாங்கினார். மிகக் கவனமாகவே அவர் பேச்சுவார்த்தையில் நடந்துகொண்டபோதிலும் சோவியத்ஒன்றியம் என்ற பின்புல சக்தி வீழ்ந்தது பெரும் சிக்கலாக இருந்தது. அதன்பின்னரான பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் அராபத்தின்மீதுதிணிக்கப்பட்டன என்றே தோன்றுகிறது. பிற போராளி குழுக்கள் இப்பேச்சுவார்த்தையை எதிர்த்தபோதிலும் அமெரிக்க வல்லாண்மை,அதன் கையாளான இஸ்ரேலின் நிலை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு அராபத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளில்ஈடுபட்டார்.
இக்கட்டத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் இராணுவரீதியிலும் பலவீனமடைந்தது. பேச்சுவார்த்தையில் தாம் திட்டமிட்டதைவிடமிகவும் குறைவான பரப்பளவில் பாலஸ்தீன நாட்டை உருவாக்கிக்கொள்ள அராபத் சம்மதிக்கநேர்ந்தது. இதற்கும் ஒப்புக்கொண்டநிலையில், அதைக்கூட செயல்படுத்த இஸ்ரேல் அனுமதிக்கவில்ல. அமைதி உடன்பாடு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதனால் பிற பாலஸ்தீன போராளி குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டன. இதையே காரணமாகக் காட்டி இஸ்ரேல் வழக்கம்போலபாலஸ்தீனம் மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டதுடன், கடந்த 3 ஆண்டு காலமாக யாசர் அராபத்தை அவரைதலைமையகத்தைவிட்டு வெளியேற இயலாதவாறு முடக்கியது. அவர் நோய்வாய்ப்பட்ட போதிலும்கூட வெளியேற அனுமதிக்கவில்ல.இறுதியாக வேறுவழியின்றி பாரிஸிலுள்ள இராணுவ மருத்துவமனக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கேயே மரணமடைந்துவிட்டார் யாசர்அராபத்.
அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்திய நார்வேயும் சரி, அமெரிக்காவும் சரி, அராபத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசை அளிக்கபரிந்துரைத்த எந்தவொரு நாடும் சரி இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மயிரையும் ஆட்டவில்லை.
விட்டுக்கொடுத்தல்களினால் அராபத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது. பாலஸ்தீன மக்களுக்கு...?
அமைதிப் பேச்சுவார்த்தைகளில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகியுள்ளது இந்நிகழ்வு.வியட்னாமும்கூட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும் தனது படைவலுவைக் குறைக்காமலேயே பேச்சுவார்த்தையில்ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தனது படை பலத்தோடேயே பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. ஆனால்,யாசர் அராபத் இத்தகைய நிலையில் இல்லாமல் தனது படைவலுவை இழந்தார். இதுவே எதைக்கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளும்மனநிலைக்கு அவரைத் தள்ளியது.
அப்போதே அரசியல்ரீதியாக அராபத் கொல்லப்பட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
நீண்டகாலமாக போராட்ட களத்தில் நிற்கும் இயக்கங்கள அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் நீண்டகாலம் களம் காணவிடாதுஅமைதியின் பிடிக்குள் வைத்துக்கொண்டால் அவர்களின் போராட்ட மனநிலை "சாந்தப்பட்டுவிடும்" என்பதே அமைதிப்பேச்சுவார்த்தைக்கு களம் அமைத்துக்கொடுப்பவர்களின் எண்ணம் என்றால் மிகையில்லை. எந்நிலையிலும் விட்டுக்கொடுக்காதுபோராடினால் மட்டுமே விடுதலை நிச்சயம் என்பதே பாலஸ்தீனமும், தென்னாப்பிரிக்காவும் வியட்நாமும் தரும் பாடமாகும்.
வால்:
- அராபத் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அவர் இறந்துவிடவேண்டும் என்றேகருத்துதெரிவித்தனர் இஸ்ரேலியர்கள்.
- அசுரன்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications