36 குடும்பங்கள்.. 200 ஏக்கர் நிலம்: அதிசய கூட்டுக் குடும்பம்
கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பதே அருகி வரும் நாகரீக உலகில், தேனி மாவட்டத்தில் பல தலைமுறையைச் சேர்ந்த 36குடும்பங்கள ஒன்றாய் சேர்ந்து ஒரே கூட்டுக் குடும்பமாக, எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்துவருகிறார்கள்.
வட வீரநாயக்கர் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். வைகை அணை கட்டப்படுவதற்கு முன் அப் பகுதியில் விவசாயம்செய்து பிழைத்து வந்தனர் இவர்களது மூதாதையர்கள். 1951ம் ஆண்டு வைகை அணை கட்டப்பட்டபோது அங்கிருந்த பல நூறுகிராமங்கள் நீரில் மூழ்க இருந்தன.
இதையடுத்து அங்கு வசித்த மக்கள் வேறிடங்களுக்கு செல்ல கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அந்த வகையில் இந்த வீர நாயக்கர் சமூகக் குடும்பமும் அங்கிருந்து வெளியேறியது. அக் குடும்பத்திற்கு 200 ஏக்கர் மாற்றுநிலத்தை அரசு வழங்கியது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்த வந்த இவர்களது குடும்பமும் பல்கிப் பெருகியது.
முதலில் 14 குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். இப்போது மகன்கள், மகள்களுக்கு திருமணமாகி 36குடும்பங்களாகி விட்டது. ஆனாலும் நிலத்தை பிரிக்காமல் இவர்கள் இவர்கள் அனைவருமே கூட்டாகவே வசித்து வருகின்றனர்.
இது குறித்து இக் குடும்பத்தின் மிக மூத்தவரான வீர நாயக்கர் கூறுகையில், ஒன்றாக வசித்தால் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும்வராது என்பதற்கு எங்கள் குடும்பம் ஒரு எடுத்துக் காட்டு. எங்களது நிலத்தை இதுவரை நாங்கள் பங்கு போடவில்லை. அதைஎங்களது குடும்பத்தை சேர்ந்த யாரும் விரும்பவில்லை.
எங்கள் பகுதியில் பல ஜமீன்தார்களின் குடும்பங்கள் நிலம் பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருந்த இடம் தெரியாமல்போய் விட்டன. அதே போல ஒரு நிலைமை எங்கள் குடும்பத்திற்கும் வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கூட்டுக் குடும்பமாக வாழ்வதால் எல்லோருக்கும் பொறுமை உணர்வும், எதையும் தாங்கும் தைரியமும் கிடைக்கும். யாருக்குஎப்படிப்பட்ட துக்கம் வந்தாலும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல நிறைய பேர் இருப்பார்கள். இதனால் அவர்களின் மனதில்தேவையில்லாத அச்ச உணர்வு ஏற்படாது.
நாங்கள் வாரத்திற்கு 6 நாட்களும் மைதா மற்றும் சோள உணவைத் தான் உண்கிறோம். ஒரே ஒரு நாள் மட்டும் தான் அரிசிசாப்பாடு. அன்று மட்டும் எங்களது குடும்பத்திற்கு 36 கிலோ அரிசி தேவைப்படும் என்கிறார் வீர நாயக்கர்.
தமிழக அரசு விருது:
இந்த அதிசய குடும்பத்திற்கு கடந்த வருடம் தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்தது. மிகவும் ஒற்றுமையாக கூட்டுக் குடும்பம்நடத்தி வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இந்தக் குடும்பத்தின் இன்னொரு உறுப்பினரான ராமராஜூ கூறுகையில், கூட்டுக் குடும்பத்தில் இருப்பதால் எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. வருடத்திற்கு ஒரு முறை குடும்ப பட்ஜெட்டை அனைவரின் முன் சமர்ப்பிப்போம். இதில் யாருக்கும் எந்தசந்தேகமும் வராது என்கிறார்.
இந்த அதிசய கூட்டுக் குடும்பத்தில் இன்னொரு சிறப்பு உள்ளது. ஆண்களுக்கு 25 வயது ஆன உடனேயே திருமணம் செய்துவைத்து விடுவார்கள். இந்த வயதில் திருமணம் செய்வது தான் அனைவருக்கும் நல்லது என்கிறார் ராமராஜூ.
மணப்பெண்களை வெளியில் இருந்து தேர்வு செய்கிறார்கள். கடந்த 1996ம் ஆண்டு ஒரே நாளில் 6 ஆண்களுக்கு திருமணம்நடந்ததாம். புதிதாக திருமணமாகி வரும் பெண்களிடம் கூட்டுக் குடும்பத்தின் அருமை, பெருமைகளை விளக்கி இன்றும் தனதுகுடும்பத்தை காப்பாற்றி வருகிறார் வீர நாயக்கர்.
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications